பேரக்குழந்தைகளை கையில் ஏந்தியபடி கொஞ்சிய முகேஷ் அம்பானி மனைவி!
முகேஷ் அம்பானி மற்றும் நீட்டா அம்பானி தம்பதி தங்கள் பேரப்பிள்ளைகளை வரவேற்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
முகேஷ் அம்பானி பேரப்பிள்ளைகள்
இந்தியாவின் பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானி - நீட்டா அம்பானியின் ஒரே மகளான இஷாவுக்கு கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் 12ம் திகதி திருமணம் நடைபெற்றது.
இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரமல் ரியால்டி நிறுவனத்தின் தலைவர் அஜய் பிரமல் - ஸ்வாதி பிரமல் தம்பதியரின் மகனான ஆனந்த் பிரமலை அவர் மணம் முடித்திருந்தார்.
கருவுற்ற இஷாவுக்கு அமெரிக்காவில் கடந்த நவம்பர் 19-ம் திகதி இரட்டைக் குழந்தை பிறந்தது.
ஒரு பெண், ஒரு ஆண் என பிறந்த இரட்டைக் குழந்தைகளில் பெண் குழந்தைக்கு ஆதியா என்றும், ஆண் குழந்தைக்கு கிருஷ்ணா என்றும் பெயர் சூட்டப்பட்டது.
Viral Bhayani
நீட்டா மகிழ்ச்சி
அமெரிக்காவிலேயே இருந்து வந்த இஷா, குழந்தை பிறந்த பிறகு முதல்முறையாக கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் நேற்று மும்பை வந்தார்.
அவரையும் குழந்தைகளையும் வரவேற்கும் விதமாக மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் மாளிகை அலங்கரிக்கப்பட்டிருந்தது.
முகேஷ் அம்பானி, நீட்டா அம்பானி, இவர்களின் மகன்களான ஆனந்த் அம்பானி, ஆகாஷ் அம்பானி என குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.
முக்கியமாக நீட்டா தனது பேரப் பிள்ளைகளை கையில் ஏந்தி உச்சி முகர்ந்து மகிழ்ந்தார், அவர்களை பிரியாமல் கையிலேயே ஏந்தியிருந்தார்.