முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண நிச்சயதார்த்தம்
முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சண்ட்டுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர், தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சண்ட் என்பவருக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
ராஜஸ்தான் மாநிலம் நாத்துவாராவில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோவிலில் இந்த நிச்சயதார்த்த விழாவை நடந்தது.
ராதிகா மெர்ச்சன்ட் ஒரு மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ஆவார். ஆனந்த் மற்றும் ராதிகா சில வருடங்களாக ஒருவரையொருவர் அறிந்தவர்கள்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் கார்ப்பரேட் விவகாரங்களின் இயக்குனர் பரிமல் நத்வானி, தம்பதியருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அனந்த் அமெரிக்காவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் தனது படிப்பை முடித்தார், பின்னர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் ஜியோ பிளாட்ஃபார்ம்கள் மற்றும் ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் வாரியங்களில் உறுப்பினராகப் பணியாற்றினார். அவர் தற்போது RIL இன் எரிசக்தி வணிகத்தை வழிநடத்துகிறார்.
ராதிகா நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர் மற்றும் என்கோர் ஹெல்த்கேர் வாரியத்தில் இயக்குநராக பணியாற்றுகிறார்.