Mudakathan Soup : ஆரோக்கியத்தை அள்ளித்தரும் முடக்கத்தான் சூப்... இவ்வளவு நன்மைகள் இருக்கா?
முடக்கத்தான் கீரை தொன்று தொட்டு வீட்டு வைத்தியம் மற்றும் ஆயுள்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு முக்கிய மூலிகையாக காணப்படுகின்றது.
இது மூட்டுவலி, மூட்டுவீக்கம் மற்றும் ருமட்டாய்ட் ஆர்த்ரட்டிஸ் ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வு கொடுப்பதில் சிறப்பாக செயற்பட்டு வருகின்றது.
கால்களில் ஏற்படும் இறுக்கத்தன்மை மற்றும் வாதநோய் ஆகியவற்றுக்கு இந்தியர்களால் முடக்கத்தான் கீரை பராம்பரியமாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
சளி, நரம்பு கோளாறுகள், இடுப்பு வலி ஆகியவற்றுககும் இவை அரும்மருந்தாகும். ஆர்த்ரிட்டிஸ், மூட்டு வலி மற்றும் கீல்வாத நோயாளிகளுக்கும் சிறந்த வீட்டு வைத்தியமாக பார்க்கப்படுகின்றது.
மேலும் காது வலி, சளி மற்றும் இருமலைப் போக்குவதற்கும் இந்த முடக்கத்தான் கீரை பெரிதும் துணைப்புரிகின்றது. மேலும் வயிற்றுவலி மற்றும் மலச்சிக்கலுக்கு சிறந்த நிவாரணம் கொடுப்பதுடன் மதவிடாய் காரணமாக ஏற்படும் வலியை போக்கவும் உதவுகின்றது.
இதுமட்டுமன்றி தலையில் காணப்படும் பொடுகை நீக்கவும் சரும அழகை பாதுகாப்பதிலும் கூட முடக்கத்தான் கீரை சிறப்பாக பங்காற்றுகின்றது.
இத்தனை மருத்துவ குணங்கள் கொண்ட முடக்கத்தான் கீரை கொண்டு அசத்தல் சுவையில் ஆரோக்கியமாக சூப்பை எப்படி செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ஒரு கைப்பிடி அளவு முடக்கத்தான் கீரை
சின்ன வெங்காயம்- 10
சீரகம்- 3 தே.கரண்டி
மிளகு- 2 கரண்டி
பூண்டு-3பல்
கறிவேப்பிலை - தேவையான அளவு
மல்லி இலை -சிறிதளவு
தண்ணீர் -தேவையானஅளவு
உப்பு- தேவையான அளவு
செய்முறை
முதலில் முடக்கத்தான் கீரையை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
அதனையடுத்து மிளகு மற்றும் சீரகத்தை மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத்து எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் 8 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்கவிட வேண்டும்.
பின்னர் அதில் முடக்கத்தான் கீரையையும் வெங்காயம் பூண்டு , ஒரு தே.கரண்டி சீரகம் கருவேப்பிலை கொத்தமல்லி மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவிட வேண்டும்
கலவை பாதியளவு ஆகும் வரையில் கொதிக்கவிட்டு கலவையை வடிகட்டி ஆறவிட்டு, அதனுடன் சீரகம் மிளகு பொடி சேர்த்து இறுதியாக மல்லி இலையை தூவி இறக்கினால் ஆரோக்கியம் நிறைந்த முடக்கத்தான் சூப் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |