இலங்கையில் ஒரு கிலோ மிளகின் விலை இவ்வளவா?... மிளகு டீ தினமும் குடிக்கலாமா?
இலங்கையில் மிளகு ஒரு கிலோ கிராம் 1000 ரூபா வரை விற்பனை செய்யப்படுவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது இலங்கை நாட்டில் காய்கறிகளின் விலை நாளாந்தம் சடுதியாக அதிகரித்து செல்லும் நிலையில், மத்திய மலை நாட்டில் உற்பத்தியாகும் மிளகின் விளைச்சல் பல மடங்காக அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக மிளகு உற்பத்தியில் ஈடுபடும் உற்பத்தியாளர்கள் 1 கிலோ கிராம் மிளகினை 1000 ரூபா வரை விற்பனை செய்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிக விளைச்சல் காரணமாக உற்பத்தியில் ஈடுபடுவோர் நன்மையடைந்துள்ள நிலையில்,மிளகினை கொள்வனவு செய்வோர் அதிக விலை காரணமாக சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
மிளகு டீ செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
- தேயிலை தூள் - 1/2 தேக்கரண்டி
- மிளகு - 1/4 தேக்கரண்டி
- தேன் - 1 1/2 தேக்கரண்டி
செய்முறை
2 கப் தண்ணீரை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விடவும்.
தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் தேயிலை மற்றும் மிளகு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
பிறகு தேன் கலந்து பருகவும்.
இதனை தினமும் குடித்தால் பல ஆரோக்கியமான நன்மைகளை பெற்று கொள்ள முடியும்.