கோலியிடம் கோபத்தை எப்படி காட்டினார் தெரியுமா? தோனி பற்றி சில சுவாரஸ்யங்கள்..!
தோனி - விராட் இருவரின் கோபம் களத்தில் எப்படி இருக்கும் என்பதனை இஷாந்த் சர்மா சமீபத்தில் ஒரு பேட்டியில் விளக்கியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக இருந்து பல வெற்றிகளை எடுத்து கொடுத்தவர் தான் 'கேப்டன் கூல்' என அழைக்கப்படும் தோனி.
ஆட்டத்தின் போது என்ன நடந்தாலும் கூலாக இருக்கும் ஒரே கேப்டன் இவர் தான். இவரை தாண்டி இப்படியொரு கேப்டனை அணிகளில் காண முடியாது.
இதன் காரணமாகவே தோனி மேற்குறிப்பிட்ட பெயரால் அழைக்கப்பட்டார். இந்த நிலையில் அணியின் வீரர் இஷாந்த் சர்மா சமீபத்தில் ஒரு பேட்டியில் அவரின் அனுபவங்களை பகிரந்து கொண்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறுகையில், “ தோனி களத்தில் அதிகமாக கோபம் கொள்ளமாட்டார். ஆனால் சில நாட்களுக்கு முன்னர் இதற்கு முரணாக ஒரு சம்பவம் இடம்பெற்றது.
தோனியின் மனநிலையை உணர்த்தும் சில அனுபவங்கள்
அந்த வகையில், ஷிகர் தவானின் அறிமுக டெஸ்டில் நாங்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிக்கொண்டிருந்தோம். டெஸ்ட் போட்டி இரண்டாவது இன்னிங்ஸில் சிக்கல் வந்தது.
இருப்பினும், நாங்கள் வெற்றி பெற்றோம். கட்டை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், ஷிகர் இரண்டாவது இன்னிங்ஸில் பேட் செய்ய முடியவில்லை. டெஸ்ட் போட்டியில் சிக்கல் இருந்தபோது, விராட் கோலி தோல்வியடைந்தார்.
போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் தோனி - விராட் கோலியை பார்த்து நமது அணியில் ஒரு பேட்டர் குறைவாக இருந்தார் என்பது உங்களுக்கு தெரியும். அப்போது ஏன் நீங்கள் இந்த ஷாட்டை விளையாடினீர்கள் என கேட்டார்.
நான் ஏதாவது தவறு செய்து விட்டால் தோனி எங்களை திட்டமாட்டார். மாறாக உங்களால் முடியாவிட்டால் அதனை செய்யாதீர்கள் என்பார். நாங்கள் அதனை புரிந்து கொண்டு சென்று விடுவோம். இது போல் தான் விராட் கோலியிடமும் நடந்து கொள்வார்..” என கூறியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த செய்தியை தொடர்ந்து வாசிக்கும் பொழுது தோனியின் நல்ல மனது விளங்குகின்றது.