ஜடேஜாவின் விலகலுக்கு தோனி வெளியிட்ட உருக்கமான பதில்!
ஐபிஎல் தொடரில் சென்னை அணி மும்பை அணியிடம் நேற்றைய போட்டியில் படு தோல்வியை சந்தித்து, உறுதியாக வெளியேறியது.
அந்த அணியில், காயம் காரணமாக ஜடேஜா தொடரில் இருந்து விலகியுள்ளார். கடந்த நாளில், ஜடேஜாவை இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்வதை நிறுத்தியது சென்னை அணி.
அதற்கு சென்னை அணியின் தலைமை அதிகாரி காசி விஸ்வநாதனும், ஜடேஜாவை எப்போது அணி நீக்காது என விளக்கம் அளித்திருந்தார்.
ஜடேஜாவை திடீரென Unfollow செய்த சென்னை அணி - ரெய்னாவை போல் ஜடேஜாவை ஒதுக்கிறதா?
ஜடேஜாவை பற்றி தோனி பெருமிதம்
இதெல்லாம் ஒரு பக்கம் சென்ற நிலையில், சென்னை ஐபிஎல் அணியின் கேப்டன் தோனி ஜடேஜாவை பற்றி ஒரு விளக்கத்தை அளித்துள்ளார்.
அதில், மும்பை அணிக்கு எதிராக ஜடேஜா விளையாடாதது வருத்தமாக உள்ளது. அவர் தான் எங்களுக்கு அணியில் நிறைய காம்பினேஷங்களை முயற்சி செய்து பார்க்க உதவினார்.
அவருக்கு மாற்று வீரரை தேடுவது மிக கடினம். அவரை போன்று ஒருவர் களத்தில் பீல்டிங் செய்யவே முடியாது.
மைதனாத்தில் பவர் கட்டால் பரிதாப நிலைக்கு சென்ற சென்னை அணி - தெறிக்கவிடும் மீம்ஸ்
எனக்கு தெரிந்து அவருக்கு மாற்றே இல்லை. நிறைய பிரச்சினைகள் வரும்போது, நாம் செயல்பாட்டில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.
அதுதான் சிறப்பான முடிவை கொடுக்கும் என தெரிவித்துள்ளார்.