Wow... தோனிக்கு சிலை - எங்கு தெரியுமா? உற்சாகத்தில் ரசிகர்கள்
தோனிக்கு சிலை அமைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியிருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்து வருகின்றனர்.
லக்னோவை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று 6-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இப்போட்டியின் முடிவில் 20 ஓவர்களில், சென்னை அணி 7 விக்கெட் இழப்புக்கு 217 ஓட்டங்களை குவித்தது. இதனையடுத்து, 218 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய லக்னோ அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 205 ஓட்டங்களை எடுத்திருந்தது. இப்போட்டியின் முடிவில் லக்னோ அணியை 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன் முதல் வெற்றியை பதித்தது.
தோனியின் கடைசி ஆட்டம்
தோனியைப் பொறுத்தவரை இந்த ஐபிஎல் போட்டி அவருக்கு கடைசி தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வெற்றி கோப்பையுடன் ஐபிஎல் உள்ளிட்ட அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கும் விடை கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதனையடுத்து, ஐபிஎல் 2023க்கான பயிற்சியில் தோனி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
தோனிக்கு சிலை
இந்நிலையில், வான்கடே மைதானத்தில் தோனிக்கு சிலை வைக்கப்பட இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
2011ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், தோனி அடித்த வரலாற்றுச் சிறப்புமிக்க ‘Winning Shot’ சிக்சரை நினைவுகூறும் விதமாக மும்பை வான்கடே மைதானத்தில் தோனிக்கு சிலை அமைக்க மும்பை கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.
இந்த சிலையை தோனி கையாலேயே திறக்க அவரிடம் மும்பை கிரிக்கெட் சங்கம் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.