இந்திய அணிக்கு பயிற்சியை தொடங்கினார் தோனி! விராட் கோலி புகழராம்.. இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படங்கள்!
டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் ஆனது இன்று தொடங்கி, நவம்பர் 14ம் தேதி வரை நடக்கின்றன. இதில் 24-ம் தேதி நடக்கும் முதல் பிரதானச் சுற்றில் இந்திய அணியை எதிர்கொள்கிறது பாகிஸ்தான் அணி.
இதனிடையே, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற தோனி, டி20 உலகக் கோப்பைப் போட்டிக்காக மட்டும் இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தோனியின் அனுபவம், தலைமைப் பண்பு, முடிவெடுக்கும் திறமை போன்றவை வீரர்களுக்கு சரியான விதத்தில் துணை புரியும் என்பதால், இந்த முடிவை பிசிசிஐ எடுத்தது.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு இந்திய அணிக்கு ஆலோசகராக முன்னாள் கேப்டன் தோனி நியமிக்கப்பட்டிருப்பது அணியில் உள்ள வீரர்களின் நம்பிக்கைக்கு ஊக்கம் அளிக்கும் என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.
மேலும், இந்த உலகக் கோப்பைக்கு மட்டுமல்ல எப்போதுமே தோனி எங்களுக்கு ஆலோசகர்தான். நாங்கள் இந்திய அணிக்குள் வந்ததில் இருந்து, இப்போதுவரை தோனி தனக்கு வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் எங்களுக்கு ஆலோசகராகவே இருந்து வருகிறார்.
அதிலும், இளம் வீரர்கள், கிரிக்கெட் வாழ்க்கையின் தொடக்கத்தில் இருப்போருக்கு, தோனியுடன் கலந்துரையாடல் செய்து தங்களை வளர்த்துக் கொள்ள உதவியாக இருக்கும்.
இதனால், தோனியின் அறிவுரைகள், ஆலோசனைகள், நுணுக்கங்கள் போன்றவை போட்டி செல்லும் பாதையை மாற்றிவிடும், எங்களையும் உயர்த்திக் கொள்ள முடியும். எந்த அணிக்கும் தோனி கேப்டனாக இருந்தாலும், அவரால் வித்தியாசத்தை புகுத்த முடியும்.
தோனி அணிக்குள் வருவது உண்மையில் வீரர்களுக்கும், சூழலுக்கும் உற்சாகத்தை அளிக்கும். அணி வீரர்களின் நம்பிக்கைக்கு உண்மையில் மிகப்பெரிய ஊக்கத்தை அளிக்கும்.
இந்த உலகக் கோப்பைப் போட்டியில் நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம். வலிமையான அணியாக இருப்பதாக உணர்கிறோம் என கோலி புகழ்ந்துள்ளார்.
மேலும், தற்போது இந்திய அணியிஒல் தோனி இணைந்திருக்கும் புகைப்படத்தையும் பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படத்தில், தோனி பேட்டிங் பயிற்சியை சொல்லிக்கொடுக்கிறார். மற்ற வீரர்களும் அதை கவனிக்கின்றனர்.
Extending a very warm welcome to the KING ?@msdhoni is back with #TeamIndia and in a new role!? pic.twitter.com/Ew5PylMdRy
— BCCI (@BCCI) October 17, 2021
Hello. We. Are. Here! #TeamIndia #T20WorldCup pic.twitter.com/Nco4LOOhMa
— BCCI (@BCCI) October 17, 2021