உலகில் சனத்தொகை கூடிய நாடு எது தெரியுமா? இந்தியாவும் அடங்கும்
உலக நாடுகளில் நாளுக்கு நாள் சனத்தொகை விகிதம் குறைந்து கொண்டு வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இளைஞர் தற்போது குழந்தை பெற்றுக் கொள்ள தயக்கம் காட்கிறார்கள்.
அப்படி பெற்றுக் கொண்டாலும் ஒன்று அல்லது இரண்டு குழந்தையுடன் நிறுத்திக் கொள்கிறார்கள். இதனால் இறப்பு விகிதம் அதிகரித்து, பிறப்பு விகிதம் குறைந்து கொண்டு வருகிறது.
தரவுகளின்படி, இந்த வருடம் 2025 ஆம் ஆண்டில் உலகில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடு இந்தியா ஆகும்.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி, இந்தியா மக்கள் தொகையில் சீனாவை விட வேகமாக வளர்ந்து வருகிறது என சொல்லப்படுகிறது. அதற்கு பின்னர், இந்தியா சீனாவை மிஞ்சிய மக்கள் கொண்ட நாடாக தற்போது மதிப்பிடப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் அதிகமான மக்கள் தொகை நாடுகள் பற்றி தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
சனத்தொகை கூடிய நாடுகள்
ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி, கடந்த 2023 இல் உலக மக்கள் தொகை 8024,000,000 (8.024 பில்லியன்) வாழ்கின்றதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளில் அதிகளவான மக்கள் வாழ்கிறார்கள். நாளடைவில் இந்தியாவில் சனத்தொகை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே 2025 ஆம் ஆண்டில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்தியா- பிறந்திருக்கும் 2025 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் பிரகாரம் இந்தியாவில் 146.39 கோடிக்கும் அதிகமான மக்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிகமான மக்கள் தொகையை கொண்ட நாடுகளில் முதல் இடத்தில் உள்ளது.
- சீனா- கடந்த 2023 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, 140 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டிருக்கும் சீனா இரண்டாவது சனத்தொகை அதிகமான நாடாக பார்க்கப்படுகிறது.
- ஐக்கிய அமெரிக்கா- கடந்த 2023 இன் மதிப்பீட்டின் பிரகாரம், அமெரிக்க ஐக்கிய நாடுகளில் வாழும் மக்கள் தொகை சுமாராக 325 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது. உலக நாடுகளில் அதிகமான மக்கள் தொகை கொண்ட மூன்றாவது நாடாக பார்க்கப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
