Guinness record: 116 வயது வரை வாழ்ந்த மூதாட்டி.. இளம் தலைமுறைக்கு கூறிய ஒரு ரகசியம்
116 வயது வரை வாழ்ந்து கின்னஸ் சாதனை படைத்த மூதாட்டி இளம் தலைமுறையினருக்கு கொடுத்த ஒரு அறிவுரை அத்தனை டயட்டுக்களையும் ஓரங்கட்ட வைத்துள்ளது.
எதெல் கேட்டர்ஹாம் (Ethel Caterham)
எதெல் கேட்டர்ஹாம் (Ethel Caterham) என பெயர் கொண்ட மூதாட்டி கடந்த ஆகஸ்ட் 21, 1909 அன்று இங்கிலாந்தில் உள்ள ஹாம்ப்ஷயரில் எனப்படும் கிராமத்தில் பிறந்துள்ளார்.
இவர், டைட்டானிக் மூழ்குவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பும், ரஷ்ய புரட்சிக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பும் பிறந்ததாக வரலாறு உள்ளது. 116 வயதில் உலகின் மிக வயதான நபர் என கின்னஸ் சாதனை பெற்றுள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிரேசிலிய கன்னியாஸ்திரி சகோதரி இனா கனபரோ காலமானதைத் தொடர்ந்து, அவரது வாழ்க்கை இரண்டு உலகப் போர்கள், ஐக்கிய இராச்சியத்தில் ஆறு வெவ்வேறு மன்னர்கள் மற்றும் 27 பிரதமர்கள் வரை சென்றுள்ளது.
எட்வர்டியன் சகாப்தம் முதல் செயற்கை நுண்ணறிவு யுகம் வரை, கேட்டர்ஹாம் வரலாறு கற்பனையிலும் நினைத்து பார்க்க முடியாத கதையாக மாறியுள்ளது.
116 ஆண்டுகள் வாழ கடைபிடித்த ரகசியம்
இந்த நிலையில், அவ்வளவு நாட்கள் இந்த உலகில் வாழ்ந்த எதெல் கேட்டர்ஹாம் ஒரு விடயத்தில் மாத்திரம் கவனமாக இருந்துள்ளார்.
அதாவது, “யாருடனும் ஒருபோதும் வாக்குவாதம் செய்ய மாட்டேன், நான் சொல்வதைக் கேட்டு, எனக்குப் பிடித்ததைச் செய்கிறேன்” என வாழ்ந்துள்ளார் மற்றவர்களுடன் இணக்கமாகவும் மன அழுத்தமில்லாமலும் வாழ இந்த தத்துவம் அவருக்கு உதவியாக இருந்துள்ளது. மனம் ரீதியாக நிம்மதியாக இருப்பவர்கள் தற்போது மிகக்குறைவு. நாளுக்கு நாள் பிரச்சினைகளால் எப்படி உயிரை விடலாம் என சிந்திப்பவர்களின் எண்ணிக்கை அதிமாகி வருகிறது.
நாள்பட்ட மன அழுத்தம் இதயம் மற்றும் மூளையில் ஏற்படும் மோசமான நோய்களுக்கு முக்கிய காரணமாக அமைகிறது என மருத்தவர்கள் எச்சரிக்கிறார்கள். இதனை உறுதிப்படுத்தும் வகையில் எதெல் கேட்டர்ஹாம் வாழ்க்கை முறை அமைந்துள்ளது.
நீண்ட ஆயுள்
கேட்டர்ஹாமின் குடும்பத்தினருக்கு நீண்ட ஆயுள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஏனெனின் அவருடைய மூத்த சகோதரிகளில் ஒருவரான கிளாடிஸ் பாபிலாஸ் 104 வயது வரை வாழ்ந்துள்ளார்.
தற்போது மூன்று குழந்தைகளுக்கு பாட்டியாகவும், ஐந்து குழந்தைகளுக்கு கொள்ளுப் பாட்டியாகவும் இருக்கும் கேட்டர்ஹாம் குடும்ப இழப்புகளின் ஏற்ற தாழ்வுகளைத் தாண்டிய போதிலும், எல்லாவற்றையும் நடைமுறையில் எடுத்துக்கொள்வதாக பகிர்ந்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |