இந்த நாட்டுக்கு போங்க மகிழ்ச்சி பொங்கும்.. உலகிலேயே மகிழ்ச்சியான நாடு எது தெரியுமா?
பொதுவாக நம்மிள் பலர் ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசையில் மன நிம்மதியை தொலைத்து, நரகத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.
இவர்கள் ஆடம்பரம் தான் மகிழ்ச்சி என நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் மகிழ்ச்சி என்பது அவர்களின் மனதில் உள்ளது.
மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என பேராசைக் கொள்ளும் ஒவ்வொரு மனிதரும் மனதை அழுக்கு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதுவே உங்களுக்கு நிலையான சந்தோஷத்தை கொடுக்கும்.
உலக நாடுகளன் பொருளாதார முன்னேற்றம், சமூகங்களின் நலம், மக்களின் மன நிறைவு ஆகியவற்றை அடிப்படையாக வைத்து ஒரு நாட்டின் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளார்களா? என்பது கணிக்கப்படுகிறது.
உலகளாவிய சந்தோஷமாக இருக்கும் நாடுகளில் என்னென்ன என தேடிய போது 156 நாடுகள் அந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளன. இந்த முடிவு குறித்த நாட்டில் வாழும் மக்களின் வாழ்க்கை தரம், சமூக நலன், பொருளாதார வளங்கள், அரசு நிலைத்தன்மை மற்றும் தனிநபர் ஒற்றமை போன்ற காரணிகள் அடிப்படையாக வைத்தே மதிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், உலக நாடுகளில் மகிழ்ச்சியான மக்கள் அதிகம் வாழும் நாடுகளின் பட்டியலை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

1. பின்லாந்து
உலகில் உள்ள நாடுகளில் மிகவும் சந்தோஷமான நாடு எது என தேடிப் பார்த்த பொழுது பின்லாந்து முதல் இடத்தை பிடித்தது. இயற்கை வளங்களுடன் கூடிய அமைதி மற்றும் சிறந்த சமூக உறவுகள், குடும்ப உறவுகள் அவர்கள் மீது வைத்துள்ள பாசம் ஆகியன அங்குள்ளவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது.

2. டென்மார்க்
டென்மார்க் மகிழ்ச்சியான நாடுகளில் இரண்டாம் இடத்தை பிடிக்கிறது. இங்கு வாழும் மக்கள் நிம்மதியாகவும், புரிந்துணர்வுடனும் நடந்து கொள்கிறார்கள். வாழ்க்கையில் அமைதி மிகவும் அவசியம். இந்த நாட்டில் இது இயற்கையாகவே கிடைக்கிறது.

3. நெதர்லாந்து
நெதர்லாந்து நாட்டில் வாழும் மக்கள் சிறந்த சமுதாய முன்மாதிரியை கொண்டுள்ளனர். மிகவும் சந்தோஷமான நாடுகளில் இதுவும் ஒன்று. அத்துடன் இந்த நாட்டின் நல்லிணக்கம், சிறந்த பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாக வைத்து உயர் கல்வி, ஆரோக்கிய பராமரிப்பு, மற்றும் வணிக நடவடிக்கைகள் வளர்ச்சியடைந்து வருகிறது. இங்கு வாழும் மக்கள் எளிமையாகவும், மன நிறைவுடனும் இருக்கிறார்கள்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |