பெண்குழந்தைக்கு மாடர்ன் பெயர் தேடுறீங்களா? அர்த்தத்துடன் இதோ
பொதுவாகவே முன்னைய காலங்களில் குழந்தைகளுக்கு பெயர் வைப்பதில் மத நம்பிக்கைகளும் பாரைியளவில் ஆதிக்கத்தை கொண்டிருந்தது. சில பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கடவுள்களின் பெயர்களை வைக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டி வந்தார்கள்.
மத நம்பிக்கைகளை பொருத்தவரையில் பெயர் ஆரம்பிக்கும் எழுத்துக்கும் எதிர்கால வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக நம்பப்படுகின்றது.

எந்த ஒரு குறிப்பிட்ட எழுத்தில் பெயர் ஆரம்பிக்கிறதோ, அதற்கு ஏற்றார் போல உங்கள் பெயருக்கான பலனும் இருக்கும் என்பதே இதன் பொருள்.
ஆனால் தற்காலத்தில் உள்ள பெற்றோர்கள் குழந்தைகளுக்கு மாடர்ன் பெயர்களை வைப்பதில் தான் அதிக ஆர்வம் காட்டுகின்றார்கள்.
அந்தவகையில் 'ம, மா' என்ற எழுத்துக்களில் ஆரம்பிக்கும் பெண்குழந்தைகளுக்காக சில மாடர்ன் பெயர்களையும் அதற்கான அர்த்தத்தையும் இந்த பதிவில் பார்க்கலாம்.

மாடர்ன் பெயர்களும் அர்த்தங்களும்
மாலிகா (maaliga)- இந்த பெயருக்கான அர்த்தம் மாலை இல்லது ராணி என்பதாக கருதப்படுகின்றது. இந்த பெயர் உச்சரிப்பதற்கு மாடனாக இருக்கும் அதே நேரம் அர்த்தம் பொதிந்ததாகவும் இருக்கும்.
மானஸ்வி (maanasvi) - இந்த பெயருக்கான அர்த்தம் அதி புத்திசாலி, அறிவுநிறைந்தவள் அல்லது தன்னை தானே சீர்திருத்திக்கொள்ளும், கட்டுக்குள் வைத்துக்கொள்ளும் ஆற்றல் கொண்டவள் என்பதாகும்.
மாக்கென்ஷி( mackenzie)- இந்த பெயருக்கான அர்த்தம் புத்திசாலிதனமான விதிகளை உருவாக்குபவரின் மகள் என்பதாகும். இதற்கு அஃனி குழந்தை என்ற அர்த்தமும் உண்டு.
மாடிலின் (madeline)- இந்த பெயருக்கான அர்த்தம் உயர்ந்தவள் அல்லது உயர்ந்த கோபுரம் என்பதாகும்.

மஹி( mahi)- மஹி என்பதன் அர்த்தம் சிறந்த பூமி அல்லது செழிப்பான ஆறு என்பதாகும்.
மஹிகா (mahika) - இந்த பெயருக்கான அர்த்தம் பிரம்மாண்டமான நிலம் அல்லது அழகிய பூமி என அறியப்படுகின்றது.
மரியானா( mariyana) இந்த பெயருக்கான அர்த்தம் இலத்தீன் மொழியில் இருந்து பெறப்பட்டதாகும். கடலின் நட்சத்திரம் என்பதே இதன் பொருள். அல்லது சிறந்தது என்றும் அர்த்தப்படும்.

மரி(mary)- இந்த பெயருக்கான அர்த்தம் கடலின் துளி என்பதாகும்.
மய்ரா(mayra) - இந்த பெயருக்கு பல மொழிகளிலும் பல்வேறு விதமான அர்த்தம் காணப்படுகின்றது. குறிப்பாக அரேபிய மொழியில் நிலவு என்று குறிப்பிடப்படுகின்றது. அதிகம் விரும்பப்படும் என்ற அர்த்தமும் உண்டு.
மாயா (maya)- இந்த பெயரின் அர்தம் மேஜிக் என்பதாகும். அல்லது மர்மான எளிதில் புரிந்துக்கொள்ள முடியாத போன்றவற்றையும் குறிக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |