உலகின் விலை உயர்ந்த காய்கறி பற்றி தெரியுமா?
விலையும் தரமும் எல்லா நேரத்திலும் சேர்ந்தே இருப்பதில்லை, சில நேரங்களில் விலை குறைந்த உணவுப் பண்டங்களும் மிகுந்த சுவையாக காணப்படும்.
கவர்ச்சியான விலை உயர்ந்த உணவுப் பண்டங்களும் காணப்படுகின்றன. குங்குமப்பூ மற்றும் ஹிமாலய மலைத் தொடரில் வளரும் காட்டுக் காளான் போன்றவையே இந்த விலை உயர்ந்த உணவுப் பண்டங்களின் வகையீடாக எம் மனதில் தோன்றும்.
எனினும் சில காய்கறி வகைகளும் அந்தளவு உயர் விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன என்றால் நம்ப முடிகின்றதா?
ஹுப் சூட்
(hopshoots)ஹுப் சூட் அல்லது ஹுப் தளிர் என அழைக்கப்படும் காய்கறி அதிக விலை உயர்ந்த காய்கறியாக கருதப்படுகின்றது.
ஐரோப்பிய நாடுகளில் இந்த காய்கறி விலை உயர்ந்த காய்கறி என பிரபல்யம் பெற்றுள்ளது.இந்தக் காய்கறி அதிகளவில் மருத்துவ குணங்களைக் கொண்டமைந்தது.
இந்தக் காய்கறி இந்தியாவில் விளைவதில்லை. ஹிமலாய பகுதியில் இந்த காய்கறி விளைவிக்கப்படுகின்றது.
இந்த காய்கறி செய்கையானது ஏனைய காய்கறிகளைப் போன்று இலகுவானதல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த காய்கறி கொள்வனவு செய்யும் பணத்தில் தங்க ஆபரணமோ மோட்டார் சைக்கிளோ கொள்வனவு செய்ய முடியும்.
இந்த காய்கறி Humulus lupulus விஞ்ஞான ரீதியில் என்றழைக்கப்படுகின்றது.
சணல் குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரமான இந்த காய்கறித் தாவரம் ஆறு மீற்றர்கள் வரையில் வளரும் எனவும் 20 ஆண்டுகள் இவற்றின் ஆயுட் காலம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Indiatimes Hindi
ஏன் இந்த காய்கறி மிகவும் விலை உயர்வானது?
ஹுப் சூட் காய்கறி அறுவடை செய்வதற்கு மூன்றாண்டு காலம் தேவைப்படுகின்றது. இந்த தாவரத்தை வளர்த்து எடுப்பதற்கு மனிதரின் பராமரிப்பு மிகவும் அவசியமாகின்றது.
மருத்துவ குணங்கள் இந்த காய்கறி காச நோயை கட்டுப்படுத்தும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் எனவும் மன அழுத்தங்களினால் பாதிக்கபட்டோருக்கு நோய் நிவாரணியாக அமையும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தூக்கமின்மை, அயற்சி, பதற்றம், எரிச்சல் போன்ற பல்வேறு உளவியல் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைகின்றது.
இந்த தாவரத்தின் மலர் பியர் உற்பத்தியின் போது பயன்படுத்தப்படுகின்றது.
patnabeats