எதை குறித்தும் கவலைப்படாத திரிஷா.... இன்ஸ்டாகிராமில் இப்போ என்ன சொல்லியிருக்கிறார்னு தெரியுமா?
நடிகர் விஜய், த்ரிஷா குறித்து பல சர்ச்சைகள் எழுந்த நிலையில், தற்போது த்ரிஷா போட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகர் விஜய் த்ரிஷா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், தவெக கட்சியின் தலைவராகவும் இருந்து வரும் நிலையில், அவரது மனைவி சங்கீதா அளித்துள்ள விவாகரத்து புகார் பயங்கர சர்ச்சையை அளித்துள்ளது.
இந்த சர்ச்சைக்கு மத்தியில் சில தினங்களுக்கு முன்பு விஜய், த்ரிஷா இருவரும் ஒரே நிற ஆடையில் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டுள்ளது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியது.

நடிகை த்ரிஷா 42 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகின்றார். ஒருமுறை வருண் மணியன் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. பின்பு ராணாவுடன் காதல் ஏற்பட்ட நிலையில், அவரது குடும்பத்தினர் ஒத்துக் கொள்ளாததால் காதல் பாதியில் நின்றுள்ளது.
த்ரிஷாவின் தற்போதைய பதிவு
தற்போது சங்கீதா விவாகரத்து புகாரால் நடிகை த்ரிஷாவை ரசிகர்கள் பயங்கர பேசியதுடன், கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.
ஆனால் நடிகை த்ரிஷா இதை எதுவும் கண்டுகொள்ளாமல் தனது வேலையைப் பார்த்துள்ளார். தற்போது அவர் பதிவிட்டுள்ள இன்ஸ்டா பதிவு வைரலாகி வருகின்றது.

திருமணத்துக்கு சென்று வந்த அன்றே மிகவும் கூலாக தனது தோழல், தோழிகளுடன் பதிவுகளை போட்டுள்ளார். இந்நிலையில் தற்போதும் புதிய போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார்.
அதாவது ஃபிங்கர் சிப்ஸை ஃபோட்டோ எடுத்து போட்டு, 'வீக் எண்ட் மோட் ஆன்' என குறிப்பிட்டிருக்கிறார். இதை பார்த்த விஜய் ரசிகர்கள் இங்கே வீக் டே எதுவும் வீக் எண்ட் எதுவென தெரியாமல் பிரச்னையை சமாளித்துக் கொண்டிருப்பதாக கூறி வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |