உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும் டாப் 5 உணவுகள்
நாம் உயிர் வாழ நுரையீரல் நன்றாக செயல்படுவது அவசியம், நாம் சுவாசிக்கும் காற்றை நுரையீரல் நன்றாக வடிகட்டிய பின்னரே ஆக்சிஜனை உடல் பாகங்களுக்கு அனுப்புகிறது.
நுரையீரல் சரியாக தனது பணியை செய்யாவிட்டால், ஆஸ்துமா நிமோனியா, மூச்சுக்குழாய் அழற்சி, காசநோய், புற்றுநோய் போன்ற மோசமான நோய்கள் தாக்கக் கூடும்.
கொரோனா வைரஸின் இரண்டாவது அலையில் கூட பெரும்பாலானவர்களுக்கு நுரையீரல் பாதிக்கப்படைகிறது, எனவே நுரையீரலை பாதுகாக்க ஆக்சிஜனின் அளவை அதிகரிக்க என்னென்ன உணவுகளை சாப்பிடலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
பூண்டு
பூண்டில் இயற்கையாகவே ஆண்டிபயாடிக், பூஞ்சை காளான், வைரஸ் தடுப்பு காரணிகள் ஆகியவை காணப்படுகின்றன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின்கள் போன்றவைகளும் அதிகமாக உள்ளன.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 பூண்டு பற்களை உட்கொள்ளலாம். இது தவிர, நீங்கள் மிகவும் உடல் சூடாக உணர்ந்தால், இரவில் பூண்டு ஒரு கிராம்பை ஊறவைத்து, காலையில் அவற்றை உட்கொள்ளுங்கள்.
தேன்
ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடத்தை பிடித்துள்ள தேனில், பக்டீரியா எதிர்ப்பு பொருட்கள் அடங்கியுள்ளது.
சூடான நீரில் எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால், உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவதுடன் நுரையீரலையும் பாதுகாக்கலாம்.
மஞ்சள்
ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருட்கள் நிறைந்துள்ள மஞ்சள் அனைத்து வகையான தொற்றுகளிலிருந்தும் நம்மை பாதுகாக்கும்.
தினமும் தூக்கச் செல்லும் முன், பாலில் மஞ்சள் சேர்த்து குடித்து வரலாம், இது, நுரையீரலை வலுப்படுத்துவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் கூட்டுகிறது.
அத்திப் பழம்
ஏ, வைட்டமின்-சி, வைட்டமின்-கே, பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர் மற்றும் இரும்பு போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அத்தியில் உள்ளன.
அத்தியை தொடர்ந்து சாப்பிட்டு வர, நுரையீரலை வலுப்படுவதுடன், இதய ஆரோக்கியத்திற்கும் சிறந்தது.
துளசி
துளசி இலையில் அதிக அளவு பொட்டாசியம், இரும்புச் சத்து, குளோரோஃபில் மெக்னீசியம், வைட்டமின் சி, கரோட்டின் ஆகிய சத்துகள் செறிந்து காணப்படுகின்றன.
இவை, நுரையீரலை வலுவாக வைத்திருக்க உதவுகின்றன. தினமும் 5 இலைகளை மென்று சாப்பிட்டு வரலாம். துளசி இலைகளை சுடுதண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை தேநீர் போல அருந்தி பயன் பெறலாம்.