காலை வெறும் வயிற்றில் இதில் ஏதாவது ஒன்றை கட்டாயம் எடுத்துக்கோங்க... உடம்பில் அதிசயத்தை உணரலாம்
காலையில் எழுந்ததும் குறைந்தது 2 டம்ளர் தண்ணீரை கட்டாயம் குடிக்க வேண்டும்
காலை வெறும் வயிற்றில் நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
காலையில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்
இஞ்சி சாறை தேனுடன் கலந்து குடித்தால் வீசிங், ஆஸ்துமா போன்ற நுரையீரல் தொடர்பான பிரச்சனை நீங்கும்.
காலை வெறும்வயிற்றில் அருகம்புல் சாறைக் குடித்தால் அல்வர் வராமல் தடுக்கலாம்.
வெந்தயத்தை நீரில் ஊற வைத்து காலை வெறும்வயிற்றில் சாப்பிட்டால் சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் குறையும்.
காலை வெறும்வயிற்றில் நெல்லிக்காய் சாறு குடித்தால் கொழுப்பு கரைவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டால் செல்களின் செயல்பாட்டை அதிகரிப்பதுடன், முடி உதிர்வு பிரச்சனை, பக்கவாத நோயை தடுக்கலாம். மேலும் உடல் எடையைக் குறைக்கவும், மூட்டுவலியை குணப்படுத்தவும் முடியுமாம்.
வெறும் வயிற்றில் மாதுளம் பழ சாறு குடீத்தால் ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி கர்ப்பைக்கு ஆரோக்கியம் அதிகரிக்கும்.
மாதுளை சாறுடன் சிறிதளது தேன் கலந்து சாப்பிட்டால் கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்தி குறையுமாம்.
சாப்பிடக்கூடாத உணவுகள்
காலையில் வெறும்வயிற்றில், தக்காளி, வாழைப்பழம், தயிர், மாத்திரை, குளிர்பானங்கள், காரமான உணவுகள், புளிப்பான பழங்கள் இவற்றினை தவிர்க்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |