இலங்கை ஸ்டைலில் கத்திரிக்காய் மோஜு எப்படி செய்யலாம்? குக் வித் கோமாளி ஸ்பெஷல்
இலங்கை ஸ்டைலில் மிகவும் பிரபலமான கத்தரிக்காய் மோஜு எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இலங்கையில் மிகவும் பிரபலமான உணவு வகைகளில் ஒன்று தான் கத்தரிக்காய் மோஜு. இனிப்பு, புளிப்பு, காரம் என மூன்று சுவைகளின் கலவையாக இருக்கும் இதனை மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர்.
தற்போது இந்த உணவானது இந்தியாவிலும் பிரபலமாகியுள்ளது. ஏனெனில் பிரபல ரியில் ஒளிபரப்பாகும் சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடிகை சஃபானா செய்து அசத்தியுள்ளார்.
இந்த உணவினை தற்போது எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
கத்தரிக்காய் - 4
சின்ன வெங்காயம் - 100 கிராம்
குச்சி கருவாடு - 50 கிராம்
பச்சை மிளகாய் - 5
சில்லி ஃப்ளாக்ஸ் - 2 ஸ்பூன்
கடுகு - 2 ஸ்பூன்
கெச்சப் - 1 ஸ்பூன்
மிளகாய் பொடி - 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/4 ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 3 பல்
சீனி - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பட்டை, ஏலக்காய், கறிவேப்பிலை - தாளிக்க

Tamizha Tamizha: ஜாதி குறித்து தெனாவட்டாக பேசிய நபர்! நிகழ்ச்சியின் நடுவே நிறுத்தி பாடம் புகட்டிய தொகுப்பாளர்
செய்முறை
முதலில் சற்று நீள நீளமாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். கடுகை பொடியாக வைத்துள்ள கொள்ளவும். இஞ்சி, பூண்டை தட்டி வைத்துக் கொள்ளவும். சிறிதளவு வெங்காயத்தை தாளிப்பதற்கு நீளநீளமாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
வெட்டி கத்தரிக்காயை உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கலந்து வைத்துள் கொள்ளவும். வாணலி ஒன்றில் எண்ணெய் ஊற்றி அதில் கத்தரிக்காயைச் சேர்த்து நன்றாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
பின்பு அந்த எண்ணெய்யில் வெங்காயம், மிளகாய், கருவாடு இவற்றினையும் தனித்தனியாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
தொடர்ந்து வாணலில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து, பட்டை, ஏலக்காய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின்பு வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
மேலும் மிளகாய் பொடி, சில்லி ஃப்ளாக்ஸ், மஞ்சள் தூள், மிளகு தூள் இவற்றினை சேர்த்து வதக்கவும். பின்பு கடுகு பொடி, உப்பு, சீனி, கெச்சப் இவற்றினை சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின்பு பொரித்து வைத்திருக்கும் கருவாடு, கத்தரிக்காய், வெங்காயம், பச்சை மிளகாய் இவற்றினை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு இறக்கினால் கத்தரிக்காய் மோஜு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |