நாள்முழுவதும் பம்பரமாக சுழல வேண்டுமா? இந்த உணவுகள் செய்யும் அற்புதம்
ஒவ்வொரு நாளும் காலை பொழுதும் நமக்கு மிகவும் மகிழ்ச்சியாக ஆரம்பித்தால் தான் நாள் முழுவதும் சிறப்பாக இருக்கும். அந்த வகையில் நாள் முழுவதும் பம்பரமாக சுழல வேண்டும் என்றால் காலை உணவு மிகவும் அவசியமாகும்.
இதற்கு காலை உணவு மிகவும் முக்கியமாகும். இதற்காக நாம் எடுத்துக்கொள்ளும் காலை உணவில் மிகவும் கவனம் வேண்டும். அவ்வாறு இல்லையெனில் பலவீனமாகவும், சோர்வாகவும் காணப்படுவோம்.
ஆனால் ம்மில் பலரும் காலை உணவை சரியாக எடுத்துக்கொள்வது இல்லை. இது மிகவும் தவறான காரியமாகும். புரதம், நல்ல கொழுப்பு, கார்போஹைட்ரேட் கொண்ட சரிவிகித உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
காலையில் சரியான நேரத்தில் சாப்பிட்டால் மட்டுமே கொலஸ்ட்ரால் மற்றும் எடையைக் குறைக்கவும், இதய நோய் தாக்கத்தையும் குறைக்க முடியும்.
காலை உணவாக என்ன சாப்பிடலாம்?
காலை உணவாக அதிக நார்ச்சத்துக்களை கொண்ட ஓட்ஸ் சாப்பிடலாம். இவை ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுவதுடன், நீண்ட நேரம் பசி ஏற்படாதவாறும் காணப்படும்.
கார்போஹைட்ரேட், பொட்டாசியம், வைட்டமின் பி6 சத்துக்களை கொண்ட வாழைப்பழத்தை காலையில் உட்கொண்டால் உடலின் ஆற்றல் அதிகரிக்கும். மேலும் இதில் ரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கும் நார்ச்சத்தும் இதில் உள்ளதால் காலையில் வாழைப்பழம் சாப்பிடுவது சிறந்ததாகும்.
ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் புரதம் நிறைந்த உணவாக முட்டை காணப்படுவதால், இவை நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். மேலும் முட்டையில் உள்ள கோலின் என்ற அத்தியாவசிய ஊட்டச்சத்து மூளை வளர்ச்சியையும், அதன் செயல்பாட்டையும் தூண்டும்.
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை காலை உணவாக உட்கொள்ளலாம். நார்ச்சத்து நிறைந்த இவை அதிகப்படியான ஆற்றலையும் கொடுக்கின்றது. மேலும் இதில் இருக்கும் மெக்னீசியம் மன அழுத்தம், பதட்டத்தையும் குறைக்கின்றது.
காலை உணவாக கீரை எடுத்துக் கொள்வதும் ஆற்றலை அதிகரிக்கின்றது. நேரடியாக சாப்பிட பிடிக்காதவர்கள், ஆம்லெட் மற்றும் டோஸ்ட் போன்றவற்றில் வைத்து சாப்பிடலாம்.
image: Joe Lingeman
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |