காலை உணவு சாப்பிடாமல் மதிய உணவு சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?
காலை உணவு சாப்பிடாமல் மதிய உணவு சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா? பொதுவாகவே நாங்கள் தினமும் மூன்று வேளை சாப்பிட வேண்டும் என்பது கட்டாயமானதென்று அதிலும் காலை உணவைத் தவிர்ப்பதனால் என்ன ஆகும் தெரியுமா?
உடல் எடையைக் குறைக்கும் நோக்கிலும் சரியான நேரமின்மையாலும் இன்று பலர் காலை உணவைத் தவிர்த்து வருகிறார்கள்.இதனால் உடலில் அவ்வளவு பாதிப்பு ஏற்படுமாம்.
பாதிப்பு
காலை உணவைத் தவிர்ப்பதால் உடலில் குளுக்கோஸ் வளர்ச்சிதை சுழற்சியில் பாதிப்பு ஏற்பட்டு சக்கரை நோய் உண்டாகும். அதன் பிறகு மதிய உணவின் மூலம் கிடைத்த அதிக குளுக்கோஸை ஈடுகட்ட, அதிகமாக இன்சுலின் சுரந்து, தொடர்ந்து மாற்றங்கள் நிகழும்.
சில மாதங்கள் கழித்து இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் ஏற்பட்டு, சர்க்கரை நோயாளியாக மாற நேரிடும். காலை உணவை மென்று சாப்பிடும்போது, எச்சில் சுரப்பில் உள்ள லைஸோசைம் (கிருமிநாசினி செய்கையுடையது), வாய்ப் பகுதியில் மையமிட்டுள்ள நுண்கிருமிகளை அழிக்கும். அதுவே உணவைச் சாப்பிடாவிட்டால், கிருமிநாசினியின் ஆதரவின்றி, வாய்ப் பகுதியில் கிருமிகளின் ஆதிக்கம் அதிகரித்து, விரைவில் வாய்நாற்றம் ஏற்படும்.
மேலும், நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பதால் முந்தைய நாள் இரவு முதல், அடுத்த நாள் மதியம் வரை நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பதால், உடலில் நடக்கும் அனைத்து வளர்சிதை மாற்றங்களிலும் பாதிப்புகள் ஏற்படும்.
காலையில் சாப்பிடாமல் தவிர்க்கும்போது, செயல்படுவதற்குத் தேவைப்படும் சக்தி கிடைக்காது. உணவின் மூலம் கிடைக்க வேண்டிய அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் கிடைக்காமல் சோர்வான நிலையை உடல் அடையும்.
சாப்பிடாமல் இருப்பதால், குளுக்கோஸ் பற்றாக்குறை ஏற்பட்டு, மூளைக்குத் தேவைப்படும் ஆற்றல் முழுமையாகக் கிடைக்காமல் மறதி அதிகரித்து அறிவாற்றலும் குறையும்.