Miracle Tree: உடலில் அற்புதம் நிகழ்த்தும் முருங்கை- வெளிநாட்டவர்கள் வியக்கும் மருத்துவம்
முருங்கை - பொடி vs. புதிய இலைகள் vs காய் போன்றவை ஊட்டச்சத்து அடிப்படையில் எவ்வாறு வேறுபடுகின்றது என்பதை விளக்கமாக பார்க்கலாம்.
முருங்கைக்கீரை பொடி
நமது வீடுகளிற்கு அருகில் மிகவும் எளிதாக கிடைக்ககூடியது தான் முருங்கைக்கீரை.
”முருங்கையை நட்டவன் வெறும் கையோடு போவான்” என்ற பழமொழிக்கு ஏற்ப நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் அடங்கியுள்ளன
இந்த முருங்கை மரம் தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் காணப்படுகின்றது. இது பல நூற்றாண்டு காலமாக பாரம்பரிய மருத்துவத்தில் இருந்து வருகின்றது.
இந்த முருங்கை மரத்தின் ஒவ்வொரு பகுதியும் அதாவது இலைகள், காய்கள் (முருங்கைக்காய்), விதைகள் மற்றும் பூக்கள், எல்லாம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை.
ஆனால் இதன் இலைகளை அரைத்து சாப்பிடும் பழக்கம் மேற்கத்திய நாடுகளில் மிகவும் பிரபலமாக உள்ளது.
இப்போது இந்த முருங்கை - பொடி vs. புதிய இலைகள் vs காய் போன்றவற்றை அவற்றின் சத்துக்கள் அடிப்படையில் பிரித்து பார்க்கலாம்.
ஊட்டச்சத்துக்களின் வேறுபாடு
முருங்கை இலைகள் - இந்த முருங்கை இலைகளில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ, கால்சியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளன.
இது தவிர இந்த செடியின் ஒரு இலையிலையே அதிக அளவில் புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளன. முருங்கை இலைகளை பதப்படுத்தாமல் அப்படியே சாப்பிடுவதால் முழு ஊட்டச்சத்தும் நம் உடலுக்கு அப்படியே கி்டைக்கும்.
முருங்கைப் பொடி - முருங்கைப் பொடி என்பது இலைகளை உலர்த்தி அரைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. இதற்காக நாம் இலைகளை உலர்த்தும் போது வைட்டமின் சி போன்ற சில உணர்திறன் ஊட்டச்சத்துக்கள் இல்லாமல் போகும்.
ஆனால் மற்ற ஊட்டச்சத்துக்கள் அதாவது இரும்பு மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்றவை மிகவும் வலுவாக இருக்கும். ஆனால் முருங்கை பொடியில் வைட்டமின் சி கிடைப்பது குறைவாக இருக்கும்.
முருங்கைக்காய் - இந்திய சமையலில் பொதுவாக முருங்கைக்காய் மிகவும் அதிகமாக பயன்படுத்துவார்கள். இதில் பல உணவு வகைகள் செய்யலாம். இதில் வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன.
இந்திய உணவுகளில் இதை சுவைக்காக மட்டுமல்லாமல், அதன் ஆரோக்கிய நன்மைகளுக்காகவும் கறிகள் மற்றும் குழம்புகள் என செய்வார்கள்.
முடிவு - முடிவாக கூறினால் இலைகள் மற்றும் பொடியுடன் ஒப்பிடும்போது முருங்கைக்காயில் சில ஊட்டச்சத்துக்கள் குறைவாகவும், வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து போன்ற பிற ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவும் உள்ளன.
எனவே ஒவ்வொருவரின் உடல் ஊட்டச்சத்தை அடிப்படையாக கொண்டு மூன்றில் ஒன்றை எடுத்துக்கொள்ளலாம். பல வகை உணவுகளாகவும் செய்து கொள்ளலாம்.
அமெரிக்காவில் முருங்கைப் பொடியின் முக்கியத்துவம் - புதிய முருங்கை இலைகள் அல்லது முருங்கைகாய்கள் வெளிநாடுகளில் கிடைப்பது கடினம். இது தவிர இதை வேறு நாட்டில் இறக்குமதி செய்தால் கூட நீண்ட நாட்கள் நீடிக்காது.
இந்த காரணத்தினால் முருங்கை பொடி வெளிநாட்டில் முக்கியம் பெறுகின்றது. இந்த பொடியை சேமிப்பது இலகுவாகும். பல மாதங்கள் நீடிக்கும்.
இதை மூத்தி, தேநீர் அல்லது சூப்பில் கூட உங்களுக்கு பிடித்தவாறு சேர்த்து கொள்ளலாம். வட அமெரிக்கா அல்லது இங்கிலாந்தில் பரபரப்பான வாழ்க்கை முறைக்கு அமைய இந்த முருங்கை பொடி முக்கியம் பெறுகின்றது.
அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தின் ஆராய்ச்சியின் அடிப்படையில் முருங்கை இலைப் பொடி புதிய முருங்கை இலைகளைப் போலவே பயனுள்ளதாகக் கருதப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |