சிறுநீரக ஆரோக்கியத்தை அதிகரிக்கும் 5 உணவுகள்
சிறுநீரக ஆரோக்கியத்தை பாதுகாக்கும் உணவுகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
நம் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் முக்கியமான பணியை செய்கிறது சிறுநீரகம், கழிவுகளை சரிவர வெளியேறினால் மட்டும் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும்.
மட்டுமின்றி திரவங்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளை சமநிலைப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஆனால் தற்போதைய உணவுப்பழக்க வழக்கம், உடற்பயிற்சி இல்லாதது போன்ற பல காரணிகளால் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் பாதிப்படைகிறது.
இந்த பதிவில் சிறுநீரகத்தை பாதுகாக்க நாம் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் பற்றி பார்க்கலாம்.
Blueberries
புளுபெர்ரிகளில் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளன. சிறுநீரக செல்களை சேதப்படுத்தும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராட இவை உதவும்.
சிறுநீரக நோயாளிகளுக்கு ஏற்படும் வீக்கத்தை இல்லாமல் செய்யும். இதில் பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளடக்கம் குறைவாக இருப்பதால், சிறுநீரகத்திற்கு மிகவும் உகந்தது.
சால்மன் மீன்கள்
சால்மன் போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன.
இது உடலில் வீக்கத்தைக் குறைத்து சிறுநீரக சேதத்திலிருந்து பாதுகாக்கும். இது தவிர இந்த மீன்கள் இதயம், மூளை, கண்கள், வீக்கம் மற்றும் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.
Kale கீரைகள்
காலே கீரை என்பது பரட்டைக் கீரை அல்லது கேல் கீரை என்று தமிழில் அழைக்கப்படுகிறது. தினமும் உணவில் காலே கீரைகளை சேர்த்துக்கொள்ளுங்கள்.
இந்த கீரைகளில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே நிறைந்துள்ளன.இதன் நார்ச்சத்து உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. எனவே இதை தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால் உங்கள் சிறுநீரகங்கள் பாதுகாப்பாக இருக்கும்.
சிவப்பு குடை மிளகாய்
சிவப்பு குடை மிளகாய் உங்கள் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு சிறந்தது. அவற்றில் பொட்டாசியம் குறைவாகவும், வைட்டமின்கள் சி மற்றும் ஏ மற்றும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது.
இது தவிர வைட்டமின் பி6 மற்றும் ஃபோலிக் அமிலமும் உள்ளது. நீங்கள் அவற்றை பச்சையாக சாப்பிடலாம், சிற்றுண்டியாக டிப் செய்து, வறுத்து, வதக்கி, சாலடுகள் அல்லது சாண்ட்விச்சில் சேர்த்து சாப்பிடலாம்.
காலிஃபிளவர்
சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்த காலிஃபிளவர் ஒரு சிறந்த உணவாகும். இதில் பொட்டாசியம் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது.
செரிமானத்தை மேம்படுத்துவதன் மூலமும், நச்சுப் பொருட்களைக் குறைப்பதன் மூலமும் சிறுநீரக ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.
உடலில் ரத்த அழுத்தம் கூடுதலாக இருந்தால் காலிஃபிளவர் அதை குறைக்கும், காலிஃபிளவரில் சல்பர் சேர்மங்கள் காரணமாக சிறுநீரக கற்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |