காஃபி குடித்தால் இவ்வளவு பக்கவிளைவு ஏற்படுமா? ஆனால் உடனே நிறுத்தக்கூடாதாம்
அதிக காபி அருந்துவது தலைவலிக்கு வித்திடுவதாக சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இன்றைய பரபரப்பான உலகின் அன்றாடம் கிடைக்கும் சின்ன இடைவெளிகளில் நம்மை மகிழ்வித்து காபி நம்மில் பலரது வாழ்வின் அங்கமாக மாறிவிட்டது.
நம் நாளைத் தொடங்க நம்மில் பலருக்கு காலையில் காபி தேவை. காபியில் உள்ள காஃபின் நம் உணர்வுகளை வேகமாக செயல்பட வைக்கிறது.
அதனால்தான் பரீட்சையின் போதும், தூக்கம் வரும்போதும், விழித்திருக்கவும் காபியை மக்கள் நாடுகிறார்கள். இருப்பினும், இதற்கு சமமாக காபி அதன் பக்க விளைவுகளையும் கொண்டுள்ளது.
காபி குடித்தால் தலைவலி
ஒரு நாளைக்கு நான்கு கப் காபி குடிப்பது தலைவலியை உண்டாக்கும் என சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மேலும் காபி எவ்வாறு தலைவலியை ஏற்படுத்துகிறது என்பதையும் இந்த ஆய்வறிக்கை விளக்குகிறது.
காஃபியில் உள்ள வேதிப்பொருளான காஃபின் தான் இந்தத் தலைவலிக்கு காரணமாகிறது. தினமும் 400 மி.கி அல்லது 4 கப் காபி குடிப்பதால் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படும்.
அதுமட்டுமின்றி, இரண்டு வாரங்களுக்கு மேல் ஒரு நாளைக்கு 200 மில்லிகிராம் காஃபின் உட்கொள்பவர்களுக்கும் ஒற்றைத் தலைவலி வரலாம்.
இதனை தெரிந்து கொண்டு திடீரென காபி குடிப்பதை நிறுத்திவிடாதீர்கள்... அதுவும் ஆபத்து என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
உடனே நிறுத்தாதீங்க
திடீரென்று காபியை நிறுத்துவதும் பிரச்சனைகளை ஏற்படுத்தும், எனவே, உங்கள் பழக்கத்தை படிப்படியாக மாற்றவும். இதை நீங்கள் நிர்வகிக்க முடிந்தால், ஒற்றைத் தலைவலி அபாயமும் பெருமளவில் குறையும்.
தலைவலி தவிர, அதிகப்படியான காஃபின் காரணமாக பதட்டம், மன அழுத்தம், தூக்கப் பிரச்சனைகள் மற்றும் மோசமான வாழ்க்கை முறை போன்ற மற்ற பிரச்சனைகளும் ஏற்பட்டு அவை இறுதியாக தலைவலிக்கு வழிவகுக்கும்.