தொப்பையை அடித்து விரட்ட காஃபியில் இந்த பொருட்களை சேர்த்து குடிங்க!
உடல் எடையை குறைக்க இளைய தலைமுறையினர் பல வித டயட்டை பின்பற்றி வருகின்றனர்.
உடலில் தேங்கி இருக்கும் கொழுப்பை எளிதாக கரைப்பதற்கான தீர்வை காஃபி வடிவில் நாங்கள் கொண்டு வந்துள்ளோம்.
ஒரு காபிஃயை சில சமையலறை பொருட்களை சேர்த்து தயார் செய்து குறைய மறுக்கும் தொப்பையை குறைக்கலாம்.
இந்த சிறந்த பானத்தை இங்கே பார்க்கலாம்.
காஃபியை எடை குறைக்கும் பானமாக மாற்றுவது எப்படி?
தேங்காய் எண்ணெய் மற்றும் வெண்ணெய் உள்ளிட்டவற்றை பானங்களில் சேர்ப்பது எடையை குறைக்க உதவுகிறது.
தேங்காய் எண்ணெயில் உள்ள மீடியம் செயின் ட்ரையசில்கிளிசரால்கள் மற்றும் வெண்ணெயில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் பானத்தில் புரத அளவை அதிகரிக்கிறது. உங்களை முழுமையாக வைக்கிறது.
இங்கே பட்டர் காஃபி பற்றி தான் பார்க்க போகிறோம்.
இது ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட் இல்லாத ஒரு சரியான பானம் என்பதால் தொப்பையை குறைக்க உதவும்.
ஆனால் நீங்கள் விரைவாக உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால், பட்டர் காஃபியுடன் கார்போஹைட்ரேட்ஸ் இல்லாத டயட்டை பின்பற்றுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
பட்டர் காஃபி செய்முறை
தேவையான பொருட்கள்
- 1 ½ கப் தண்ணீர் - 2 டீஸ்பூன்
- பட்டர் (வெண்ணெய்) - 2 டீஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
- காஃபி பவுடர் - 1 சிட்டிகை
- இலவங்கப்பட்டை - 1 சிட்டிகை
- ஜாதிக்காய் (விரும்பினால்)
செய்முறை
ஒரு பாத்திரத்தை எடுத்து 1 டீஸ்பூன் காஃபியுடன் 1 ½ கப் தண்ணீரைச் சேர்த்து, கலவையை காய்ச்சுங்கள்.
இதற்கிடையில் ஒரு பெரிய கிண்ணத்தில் எடுத்து வைத்திருக்கும் வெண்ணெய், தேங்காய் எண்ணெய், இலவங்கப்பட்டை, ஜாதிக்காய் (விரும்பினால்) சேர்த்து, ஒரு ஹேண்ட் விஷ்க் (hand whisk) பயன்படுத்தி நன்றாக கலக்கவும்.
இந்த கலவை நுரைத்ததும் இதனை 2 டேபிள்ஸ்பூன் எடுத்து, நீங்கள் தண்ணீர் மற்றும் காஃபி சேர்த்து தயாரித்த வெதுவெதுப்பான கலவையில் (1 கப்) ஊற்றி நன்கு கலக்கவும்.
இந்த பானம் தொப்பையை சிரமமின்றி 1 வாரத்தில் குறைக்க உதவும். ஆனால் கூடவே சரியான டயட்டை பின்பற்றுவது முக்கியம்.