தொலைந்த உங்கள் தொலைபேசியை ஒரு நாளைக்குள் மீட்கலாம்: எப்படி தெரியுமா?
தற்போதைய காலகட்டத்தில் திருட்டு சம்பவங்கள் மிகவும் அதிகமாகிவிட்டன. அதிலும் செல்போன் திருட்டுப் போவது மிகவும் அதிகமாகிவிட்டது.
செல்போனை தொலைத்தவர்கள் அதிலுள்ள முக்கிய தகவல்கள், தொலைபேசி எண்கள் போன்றவற்றை தொலைத்துவிட்டு மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
இனி அந்த பிரச்சினையை சரி செய்வதற்கு புதியதொரு அம்சத்தை மே 17ஆம் திகதி முதல் மத்திய அரசு அமுலுக்கு கொண்டு வரவுள்ளது.
image - the independant
அதாவது, CEIR என்ற தொழில்நுட்ப அமைப்பின் மூலமே குறித்த சேவை செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இதில் தொலைக்கப்பட்ட செல்போன்களின் செயல்பாட்டை முடக்கி, அவற்றை ட்ராக் செய்து காவல்துறையினரின் உதவியுடன் பயனர்களை மீட்கலாம்.
இந்த சேவையின் மூலம் தொலைபேசிகளை மீட்க, புகார் செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் நகலை பயனர்கள் பதிவிட வேண்டும்.
அதேபோல் தொலைபேசியின் வகை, IMEI எண்கள், தொலைபேசி எண், திருடப்பட்ட இடம் என்பவற்றை பதிவிட வேண்டும்.
தகவல்கள் சரியாக இருந்தால் ஒரு நாளைக்குள் தொலைபேசி முடக்கப்படும். பின்பு அவற்றை கண்காணித்து மீட்கும் நடவடிக்கைகள் தொடரும்.
image - hotcore.com
தொலைபேசி மீட்கப்பட்டதன் பின்னர் பயனர்கள் தொலைபேசியை அன்ப்ளொக் செய்து எப்போதும் போல் பயன்படுத்தலாம்.
இது தொலைபேசி திருட்டை குறைக்கவும், புகாரளிப்பதை எளிதாக்கவும், செல்போன்களை விரைவாக மீட்கும் நோக்கத்திலும் கொண்டுவரப்பட்ட ஒரு சேவையாகும்.