பெண்களின் தொலைபேசியில் இருக்க வேண்டிய முக்கியமான எண்கள் - இல்லை என்றால் உடனே பதிவு செய்யுங்கள்
வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள், தனியாக வெளியே செல்பவர்கள் அவசர உதவிக்கு அழைக்கும் எண்களை பதிவேற்றம் செய்து வைத்திருக்க வேண்டும்.
தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சி பெற்று வருகிறது. கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட தேவையினால் பத்து ஆண்டுகளுக்கு பின்பு வரவேண்டிய தொழில்நுட்ப மாற்றங்கள் இந்த இரண்டு ஆண்டுகளிலேயே வந்த விட்டதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஸ்மார்ட்போன் வைத்திருப்பது உலகத்தையே கைக்குள் அடக்கி வைத்திருப்பதற்கு சமமாக இருக்கிறது. நமது அன்றாட வாழ்க்கையில் மேற்கொள்ளும் அத்தனை செயல்களையும் எளிதாக மாற்றும் செயலிகள் ஏராளமாக உள்ளன.
பலரது ஸ்மார்ட்போன்களின் பொழுகுபோக்கு அம்சங்கள், விளையாட்டுகள் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும். இவற்றைதவிர பாதுகாப்புக்கான அம்சங்களும் ஸ்மார்ட் போன்களில் இடம் பெறுவது அவசியமாகும். குறிப்பாக வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள், தனியாக வெளியே செல்பவர்கள் அவசர உதவிக்கு அழைக்கும் எண்களை பதிவேற்றம் செய்து வைத்திருக்க வேண்டும்.
ஆபத்து ஏற்படும் காலத்தில் யாருடைய உதவியும் கிடைக்காமல் போனாலும் சமயோசித புத்தியோடு இவற்றை பயன்படுத்தலாம்.
தேவையான உதவிகள் கிடைக்கப்பெற்று பாதுகாப்பாக இருக்கலாம். தற்போது அனைத்து செல்போன்களிலும் அவசர உதவிக்கான 100, ஆம்புலன்ஸ் சேவைக்கான 108, தீயணைப்பு துறைக்கான 101 போன்ற எண்கள் பதியப்பட்டே வருகின்றன. இந்த எண்கள் போன் லாக்கில் இருக்கும் போது கூட அழைக்கும் விதமாக பதியப்பட்டிருக்கும்.
இவற்றை தவிர நாம் சேமித்து வைத்திருக்க வேண்டிய எண்கள் சில உள்ளன அதை பற்றி பார்க்கலாம்.
- பெண்களுக்கான அவசர உதவிக்கு - 1091
- பெண்கள் மீதான வன்கொடுமைக்கு - 181
- தேசிய பெண்களுக்கான ஆணையம் - 01126944754. 26942369
- குழந்தைகளுக்கான பாதுகாப்புக்கு - 1098
- பெண்கள் மற்றும் குழந்தைகள் காணாமல் போனால் - 1094
- மனஉளைச்சலால் பாதிப்புக்குள்ளாகும் பெண்களுக்கு - 9911599100
- தமிழ்நாடுபெண்கள் ஆணையம் - 044 28592750
- தமிழ்நாடு பெண்கள் உதவி எண் - 04428592750
- ராகிங் தொல்லைக்கு - 155222
மேற்கண்ட அனைத்து எண்களையும் அவசர உதவிக்கு உங்கள் மொபைல் போனில் குறித்து வைத்து கொள்ள வேண்டும். ஆபத்து நேரங்களில் பதற்றம் அடையாமல் சரியான எண்ணை பயன்படுத்தும் சமயோசிதமும் கொண்டிக்க வேண்டும்.
இது தவிர மொபைலில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் எண்களையும் சேமித்து வைத்திருக்க வேண்டும். முக்கியமான நெருங்கிய நண்பர்களின் எண்களையும் சேமித்து வைக்கலாம்.
ஏதேனும் ஆபத்தில் சிக்கினால் அவர்களின் மூலம் உதவி பெற முடியும்.
இந்த முக்கிய எண்களை சிறு டைரியில் குறித்து கைப்பைக்குள் வைத்து கொள்ளலாம். ஒருவேளை செல்போன் தொலைந்தால் உதவக்கூடும்.