நோய் எதிர்ப்பு சக்தியை கடகடவென அதிகரிக்கும் மிளகு ரசம்!
பாரம்பரிய மருத்துவத்தில் முதல் இடம் ரசத்துக்கு தான், இதில் சேர்க்கப்படும் ஒவ்வொரு பொருளுக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு.
காய்ச்சல், உடற்சோர்வு, செரிமானம் ஆகாமல் இருப்பது, சளி என பெரும்பாலானவற்றிற்கு ரசமே மருந்தாகிறது.
அப்படி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மிளகு ரசம் செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
புளி- சிறிதளவு
துவரம் பருப்பு- சிறிதளவு (வேகவைத்தது)
மிளகு- 2 டீஸ்பூன்
சீரகம்- 1 டீஸ்பூன்
வெந்தயம்- 1/4 டீஸ்பூன்
மல்லி விதைகள்- 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை- சிறிதளவு
தக்காளி- 1
மஞ்சள் தூள்- 1/2 டீஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
செய்முறை
புளியை முதலில் கரைத்துக் கொள்ளவும், துவரம் பருப்பை நன்றாக குழைய வேகவைக்கவும் (இது இல்லாமலும் செய்யலாம்)
மிளகு, சீரகம், வெந்தயம், மல்லி விதைகள் மற்றும் கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து வெறும் கடாயில் வறுத்துவிட்டு மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் கடாயை அடுப்பில் வைத்து நறுக்கி வைத்துள்ள தக்காளி, கறிவேப்பிலை சேர்க்கவும்.
இதனுடன் புளி கரைசல் சேர்த்துவிட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும். சுமார் 15 நிமிடங்கள் நன்றாக கொதிக்கவைத்ததும், தக்காளி வெந்துவிடும்.
இதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலா பொடியையும், பருப்பையும் சேர்த்து கொதிக்க விடவும்.
கடைசியாக கொத்தமல்லிஇழை தூவி இறக்கினால் மிளகு ரசம் தயாராகிவிடும்.
சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம் அல்லது ரசமாகவும் அருந்தலாம்.