வெந்தயம் OR சீரகம்? தொப்பையை குறைக்க எது தான் சிறந்த தீர்வு?
இன்றைய காலத்தில் பலரும் உடல் எடையை குறைக்க சிரமப்பட்டு கொண்டிருக்கிறார்கள், குறிப்பாக தொப்பையை.
தொப்பையை மட்டும் குறைப்பது என்பது இயலாத காரியமே, ஒருசில ஆசனங்கள் மூலமாக தொப்பையை மட்டும் குறைக்க முயலலாம்.
இந்த பதிவில் வயிற்று பகுதியில் உள்ள சதையை குறைப்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இதனுடன் ஆரோக்கியமான உணவுகள் மற்றும் சரியான உடற்பயிற்சிகள் மூலம் தொப்பையை குறைக்கலாம்.
* வெறும் வயிற்றில் என்ன எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதில் அதீத கவனம் செலுத்த வேண்டும், முதல் நாள் காலையே வெந்தயத்தை ஊறவைத்து சாப்பிடுவதும் நல்லது தான், அதேசமயம் வெந்தயத்தை நன்றாக வறுத்து பொடிசெய்து வைத்துக்கொண்டு சுடு நீரில் சிறிது கலந்து குடித்தாலும் முழு பலனை பெறலாம்.
* ஒரு டம்ளர் அல்லது இரண்டு டம்ளர் தண்ணீருடன் முழு பட்டையை போட்டு கொதிக்கவைக்கவும், இதனுடன் சுவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம்.
* காய்ந்த இஞ்சியை பொடி செய்து வைத்துக்கொண்டு தண்ணீரில் கலந்து அல்லது டீ யில் கலந்து பருகலாம்.
* இரவு நேரங்களில் பார்லி உணவுகள் எடுத்துக்கொள்வது உடல் எடையை குறைக்கும், இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை சீராக்குவதால் கழிவுகள் வெளியேறி தொப்பை படிப்படியாக குறையத் தொடங்கும்.
* மாலை நேரங்களில் சிற்றுண்டியாக துரித உணவுகள் பக்கம் செல்லாமல் ஆப்பிள், கொய்யா போன்ற பழங்களை எடுத்துக்கொள்வதும் நல்ல தீர்வை தரும்.