தோசை, சப்பாத்திக்கு ஏற்ற தக்காளி தொக்கு: 10 நாட்கள் ஆனாலும் கெட்டுப்போகாது
இட்லி, தோசைக்கு சாம்பார், சட்னி என சாப்பிட்டு போரடித்துவிட்டதா? உங்களுக்கான ஒரு அருமையான ரெசிபி தான் தக்காளி தொக்கு.
பக்குவமாக செய்தால் 10 நாட்கள் ஆனாலும் கெட்டுப்போகாது, தக்காளியில் நம் உடலுக்கு தேவையான எண்ணற்ற சத்துக்கள் இருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்.
இந்த பதிவில் சூப்பரான தக்காளி தொக்கு செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி- 6 (பொடியாக நறுக்கியது)
பூண்டு- 10
நல்லெண்ணெய்- 5 முதல் 6 டேபிள் ஸ்பூன்
கடுகு, உளுத்தம் பருப்பு- தேவையான அளவு
மஞ்சள் தூள்- அரை டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய் தூள்- 1 டீஸ்பூன்
கருவேப்பிலை- தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு
வெல்லம்- தேவைப்பட்டால்
செய்முறை
வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து வதக்கவும்.
இதனுடன் பூண்டு, வெங்காயம் சேர்த்து வதங்கிய பின்னர் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், மிளகாய் தூள், கருவேப்பிலை சேர்க்கவும்.
பச்சை வாசனை போகும் வதை வதங்கியதும், நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்க்கவும். உப்பு தேவையான அளவு சேர்க்கவும், நன்றாக எண்ணெயில் வதங்கி வரவேண்டும், அடுப்பை மிதமான சூட்டில் வைத்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வேகவிடவும்.
உங்களுக்கு ஏற்ற பக்குவத்தில் தொக்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து விடலாம், தக்காளி அதிகம் புளிப்பது போன்று தெரிந்தால் சிறிதளவு வெல்லப் பவுடரை சேர்த்துக் கொள்ளலாம்.(தேவைப்பட்டால் மட்டும்)
அவ்வளவு தான்! நாவூறும் தக்காளி தொக்கு தயாராகிவிட்டது, சப்பாத்தி, தோசை என எதற்கும் தொட்டு ருசிக்கலாம்.