ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுறீங்களா? இதனை எவ்வாறு தடுக்கலாம்
ஒற்றைத் தலைவலி ஏற்படுவதற்காக காரணம் மற்றும் அதனை எவ்வாறு தடுக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஒற்றைத் தலைவலி
மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி இன்று பெரும்பாலான நபர்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாகியுள்ளது. இன்றைய பரபரப்பான சூழ்நிலையில், வேலை மற்றும் தொழிலில் ஏற்படும் மன அழுத்தம் ஒற்றைத் தலைவலியை ஏற்படுத்த முக்கிய காரணமாக இருக்கின்றது.
மேலும் ஒற்றைத் தலைவலி ஏற்படுவதற்கான காரணம் மற்றும் அதனை எவ்வாறு தடுப்பது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஒற்றைத் தலைவலி ஏற்பட காரணம்
ஒற்றைத் தலைவலி பெண்களுக்கு மாதவிடாய் அல்லது கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் மூலமாக ஏற்படலாம்.
மது அருந்துதல், பதப்படுத்தப்பட்ட உணவினை எடுத்துக்கொள்ளுதல், செயற்கை இனிப்புகள் போன்ற உணவு பழக்கமும் ஒற்றைத் தலைவலிக்கு காரணமாகும்.
மேலும் தட்பவெப்ப நிலையில் திடீர் மாற்றம், பிரகாசமான விளக்குகள், அதிக சத்தம் மற்றும் வாசனை திரவியங்கள் ஒற்றைத் தலைவலியை ஏற்படுத்தலாம்.
சரியான தூக்கல் இல்லாமல் இருப்பது, அதிகப்படியான மன அழுத்தம், சரியான நேரத்தில் உணவு எடுத்துக்கொள்ளாமல் தவிர்ப்பது இதுவும் ஒரு காரணமாகும்.
ஒற்றைத் தலைவலியை எவ்வாறு தடுக்கலாம்?
ஒற்றைத் தலைவலியினை தடுப்பதற்கு உடம்பில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க வேண்டும். தேவையான தண்ணீர் பருகுவது கட்டாயமாக செய்ய வேண்டும்.
பதப்படுத்தப்பட்ட மற்றும் துரித உணவினை தவிர்ப்பது நல்லது. அதிகமாக காபி, டீ அருந்தும் பழக்கத்தினை தவிர்க்கவும்.
சரியான நேரத்தில் படுத்து தூங்குவது, காலையில் குறிப்பிட்ட நேரத்தில் எழும்புவதால் ஒற்றைத் தலைவலியினைத் தடுக்கலாம்.
வைட்டமின் பி-2 ஒற்றைத் தலைவலி வராமல் தடுக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
