அறிவுக்கரசி கையில் சிக்கிய வீடியோ ஆதாரம்: என்ன செய்யப்போகிறார்? பரபரப்பான காட்சிகள்
குணசேகரனை மாட்டி விட வேண்டும் என்பதற்காக ஈஸ்வரி மறைத்து வைத்திருந்த ஆதாரத்தை அறிவுக்கரசி கண்டுபிடித்துள்ளார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் எதிர்நீச்சல் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.
முதல் பாகத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த இயக்குநர், இரண்டாவது பாகத்தை ஆரம்பித்து நாளுக்கு நாள் பரபரப்பை அதிகமாக்கி வருகிறார்.
தன்னை மீறி யாரும் இல்லை என ஆணவத்துடன் இருந்த குணசேகரனை அடக்க வந்த ஜனனியுடன் வீட்டிலுள்ள பெண்கள் அனைவரும் கைக்கோர்க்கிறார்கள். இதுவரை காலமும் தன்னுடைய வாழ்க்கைக்காக போராடிய பெண்கள், தற்போது பிள்ளைகளுக்காக அவர்களின் எதிர்காலத்திற்காகவும் போராடி வருகிறார்கள்.
இந்த நிலையில், அறிவுக்கரசியின் தங்கையான அன்புக்கரசியை தர்ஷனனுக்கு எப்படியாவது திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என குணசேகரன் தீவிரமாக இருக்கிறார்.
அதற்கு தர்ஷன் உட்பட வீட்டிலுள்ள அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்கிறார். ஆனாலும் குணசேகரன் தந்தை என்பதால் எந்த முடிவிலும் தலையிட முடியாமல் அமைதியாக இருக்கிறார்கள்.
ஈஸ்வரி மறைத்து வைத்திருந்த ஆதாரம்
இதற்கிடையில், குணசேகரன்- ஈஸ்வரி இருவருக்கும் ஏற்பட்ட சண்டையில் ஈஸ்வரி மருத்துவமனையில் சுய நினைவை இழந்து இருக்கிறார்.
ஈஸ்வரியின் நிலைமை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. மருத்துவ பரிசோதனையில் ஈஸ்வரியின் கழுத்தை நெறித்து, தலையில் பலமாக தாக்கப்பட்டு மயக்கமடைந்துள்ளார் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து குணசேகரன் வீட்டில் ஏதாவது ஆதாரம் கிடைக்குமா? என்பதை தேடுவதற்காக பொலிஸ் அதிகாரியுடன் தர்ஷினி, தர்ஷன் இருவரும் செல்கிறார்கள். எல்லா தவறையும் செய்து விட்டு குணசேகரன் கெத்தாக அமர்ந்திருக்கிறார்.
இதற்கிடையில், அறிவுக்கரசி ஈஸ்வரி அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தொலைபேசியை எடுத்து, அதில் பதிவாகியுள்ள வீடியோ பார்க்கிறார். இவர் இப்படி பார்க்கும் பொழுது பொலிஸ் அதிகாரி வந்து விடுகிறார். கதவை திறந்தால் அறிவுக்கரசி மாட்டிக் கொள்வார்.
இப்படியானதொரு பரபரப்புடன் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
