இந்த பொடி இரண்டு கரண்டி போதும்.. இடுப்பு வரை தலைமுடி நீளமாக வளரும்
தற்போது இருக்கும் மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் காரணமாக உடல் நல பிரச்சினைகள் அதிகமாகி வருகிறது. அதில், பலருக்கு தலைமுடி தொடர்பான பிரச்சனைகளும் அடங்கும்.
முடி உதிர்தல், உடைதல், வறட்சி, நுனி முடி பிளவு உள்ளிட்ட பல தலைமுடி தொடர்பான பிரச்சனைகள் அதிகமாகி வருகின்றன.
கடைகளில் விற்பனையாகும் பொருட்களை வாங்கி பயன்படுத்தினால் தலைமுடி தொடர்பான பிரச்சனைகளுக்கு நிவாரணம் கிடைக்காது. அதே சமயம் வீட்டிலுள்ள சில பொருட்களை கொண்டு வைத்தியம் செய்தால் நிரந்தர தீர்வு கிடைக்கும்.
நெல்லிக்காய் மற்றும் கறிவேப்பிலை இரண்டையும் வைத்து தலைமுடி பிரச்சினைகளுக்கு நிவாரணம் கொடுக்கலாம். ஏனெனின் இந்த இரண்டிலும் அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன.
இவை உச்சந்தலையில் உள்ள ரத்த ஓட்டத்தை அதிகரித்து தலைமுடியை வேரில் இருந்து நுனி வரை வலுப்படுத்துகிறது.
அந்த வகையில், தலைமுடி ஆரோக்கியத்திற்கு கறிவேப்பிலை மற்றும் நெல்லிக்காய் பொடி பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்களை தெரிந்து கொள்வோம்.
தலைமுடி வளர்ச்சியை இரட்டிப்பாக்கும் பொடி
-நெல்லிக்காயில் அதிக அளவு வைட்டமின் சி இருப்பதால் உங்களின் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால் நார் போன்று இருக்கும் உங்களின் தலைமுடி பட்டுப்போன்று நீளமாக வளரும்.
- நெல்லிக்காயில் குளிர்ச்சியான மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் அவை உச்சந்தலை இருக்கும் பொடுகு மற்றும் அரிப்பை எதிர்த்து போராடுகிறது. தலையில் அரிப்பு பிரச்சினையுள்ளவர்களுக்கு அதிகப்படியான தலைமுடி உதிர்வு இருக்கும்.
- நெல்லிக்காயில் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ளன. இவை தலைமுடி செல்களின் சேதங்களை பாதுகாக்கும். தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் தலைமுடி வளர ஆரம்பிக்கும். அத்துடன் சரும ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுகிறது.
- நெல்லிக்காயில் இருக்கும் இரும்புச்சத்து கூந்தலின் நுண்ணுரைகளை சுற்றி ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இது உச்சந்தலையில் அதிக ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அடைந்து ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவியாக உள்ளது.
எப்படி சாப்பிடனும்?
1. மூலிகை பானம் : ஒரு கிளாஸ் தண்ணீரில் நறுக்கிய நெல்லிக்காய், கறிவேப்பிலை, சிறிதளவு இஞ்சி, மஞ்சள் தூள் ஆகிய பொருட்களை ஒன்றாக போட்டு கொதிக்க விட்டு, காலையில் எழுந்த பின்னர் டீக்கு பதிலாக இதனை குடிக்கலாம். இது செரிமானம், சரும ஆரோக்கியம் மற்றும் தலைமுடி ஆரோக்கியம் ஆகியவற்றிற்கு உதவியாக இருக்கும்.
2. ஜூஸ் : ஒரு நெல்லிக்காய், 10 முதல் 12 கறிவேப்பிலை, சின்ன துண்டு இஞ்சி, சீரகம் மற்றும் உப்பு ஆகிய பொருட்களை ஒன்றாக போட்டு அரைத்து சாற்றை தனியாக எடுத்து குடிக்கலாம். இந்த பானம் தினமும் குடித்து வந்தால் தலைமுடி காடு போன்று வளரும்.
3. கருவேப்பிலை சாதம் : கறிவேப்பிலை போட்டு சாதம் தாளித்து அல்லது சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். இது தலைமுடியை நீளமாக வளர வைக்கும்.
4. ஸ்மூத்தி: கறிவேப்பிலை மற்றும் நெல்லிக்காயை மற்ற பழங்கள் விதைகளுடன் சேர்த்து ஸ்மூதியாக அரைத்து குடித்து வந்தால் தலைமுடி வளர்ச்சி அதிகமாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
