கும்ப ராசியில் புதன் பெயர்ச்சி: பெப்ரவரியில் இந்த 3 ராசிக்காரங்களுக்கு ட்ரிபிள் ஜாக்பாட் தான்!
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரக பெயர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.
காரணம் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றமானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை கொண்டிருக்கும் என்று தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி கும்ப ராசிக்கு இடம்பெயர்ச்சியடைகின்றார்.
இதன் தாக்கமானது 12 ராசிகளிலும் பிரதிபலித்தாலும், குறிப்பிட்ட சில ராசியினரின் தொழில் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் அபரிமிதமான அதிர்ஷ்ட பலன்களை ஏற்படுத்தப்போகின்றது.
அப்படி எதிர்பாராத வகையில் ராஜயோகத்தை அனுபவிக்கப்போகும் டாப் 3 ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

மேஷ ராசியினருக்கு இந்த புதனின் ராசி மாற்றத்தால் வாழ்க்கையில் எதிர்பாராத பல நல்ல திருப்பங்கள் நிகழப்போகின்றது.
தொழில் ரீதியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.பல்வேறு வழிகளிலும் வருமானம் ஈட்டுவதற்காக வாய்ப்புகள் கூடிவரும். திடீர் பணவரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
வேலை தேடுபவர்களுக்கு மனதுக்கு பிடித்த வேலை கிடைக்க அதிக வாய்புள்ளது சற்று முயற்சி செய்தால் இந்த காலகட்டம் பொருளாதார நீரியில் பெரிய முன்னேற்றத்தை கொடுக்கும்.
சிம்மம்

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு குறித்த புதன் பெயர்ச்சி நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு வெற்றிகரமான தீர்வை கொடுக்கப்போகின்றது.
இதனால் அவர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது, கடன் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுவீர்கள். பணவரவு திருப்பதிகரமாக இருக்கும்.அறிவாற்றலின் கிரகமாக புதனின் ஆசியால் எண்ணங்களில் தெளிவு பிறக்கும்.
திருமண வாழ்க்கையில், இருந்துவந்த பிரச்சினைகளைகள் நீங்கி கணவன் மனைவிக்கு இடையில் நெருக்கம் அதிகரிக்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும்.
துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த புதனின் பெயர்ச்சியால் எதிர்பாராத வகையில் அதிர்ஷ்டம் கிடைக்கப்போகின்றது.
அவர்கள் பல்வேறு துறைகளில் மகத்தான வெற்றிகளை குவிக்கப்போகின்றார்கள். குறிப்பாக பணியிடத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். பதவியுயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.
நீண்டநாட்களாக குடும்ப உறவுகளுக்கு மத்தியில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். மொத்தத்தில் இந்த புதன் பெயர்ச்சி அதிர்ஷ்ட பலன்களை அள்ளி கொடுக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |