புதன்- யமன் சந்திப்பு 2025- இந்த 3 ராசிக்காரர்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ஷ்டம்!
ஜோதிட சாஸ்த்திரத்தின்படி, கிரகங்களின் இளவரசனாக பார்க்கப்படும் புதன் பகவான் கல்வி, பேச்சு, புத்திசாலித்தனம், படிப்பு, அறிவு ஆகியவற்றை வழங்குபவராக பார்க்கப்படுகிறார்.
இவர், ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுவார். மொத்தமாக மாதத்திற்கு 2 முறை தன்னுடைய ராசியை மாற்றுவதால் குறிப்பிட்ட சில ராசிகளுடன் இணைந்து சுப யோகங்களை உருவாக்குவார்.
இதன்படி, தற்போது புதன் பகவான் விருச்சிக ராசியில் செவ்வாய் பகவானுடன் இணைந்து பயணிக்கிறார். இந்த பயணம், அக்டோபர் 30-ஆம் தேதி வரை தொடரும். அதன்பின்னர், மகர ராசியில் அமைந்துள்ள புளூட்டோ உடன் இணைந்து திருஷ்டி யோகத்தை உருவாக்குகிறார்.
இதன் விளைவாக திரியேகாதச யோகம் உருவாகி குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் குவிக்கவுள்ளது. நாளை மறுநாளான அக்டோபர் 30-ஆம் தேதி மாலை 6:23 மணிக்கு புதன் மற்றும் புளூட்டோ இருவரும் 60 டிகிரி இடைவெளியில் இருப்பார்.
அப்படியாயின், புதன் பெயர்ச்சியால் அதிர்ஷ்ட வெள்ளத்தில் நனையவுள்ள ராசிகள் என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.
புதன் பெயர்ச்சி

| மேஷம் | திரியேகாதச யோகத்தின் தாக்கத்தினால் சிறப்பான பலன்களை இவர்கள் அனுபவிப்பார்கள். எட்டாவது வீட்டில் புதன் பகவானும், புளூட்டோ பத்தாவது வீட்டிலும் சஞ்சரிக்கின்றனர். இதன் விளைவாக குடும்பம், நண்பர்கள் இவர்களிடம் இருந்த பிரச்சினைகள் குறையும், நேர்மறையான தாக்கங்கள் அதிகமாக இருக்கும். கௌரவமாக உணர்வீர்கள். |
| கும்பம் | கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு புதன் பெயர்ச்சியால் புதிய உதவிகள் வர வாய்ப்பு உள்ளது. தொழிலில் வழக்கமாக இருந்த முன்னேற்றத்தை விட அதிகமாக இருக்கும். சமூகத்தில் நல்ல மரியாதை கிடைக்கும். புதிய முயற்சிகள் செய்தால் அதன் மூலம் வெற்றி கிடைக்கும். நீங்கள் செய்யும் முயற்சிகள் அனைத்திற்கும் ஒரு பலன் இருக்கும். அறிவு சார்ந்த பல விடயங்களில் முன்னிலையில் இருப்பீர்கள். வாழ்க்கை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். |
| துலாம் | துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு புதன் பெயர்ச்சியால் பேச்சாற்றல் அதிகமாகும். உங்கள் பேச்சு திறமையால் புதிய வணிகங்கள் மற்றும் பிற இடங்களில் வெற்றி பெறுவீர்கள். மாணவர்களுக்கு சாதகமான காலம் இது. செல்வம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் நல்ல லாபம் கிடைக்கும். எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. புதிய வாகனங்கள், வீடு வாங்கும் யோகம் உண்டாகும். |
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |