வாரம் 3 முறை போடுங்க.. இடுப்பு வரை தலைமுடி நீளமாக வளரும்!
தற்போது இருக்கும் மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் காரணமாக உடல் நல பிரச்சினைகள் அதிகமாகி வருகிறது. அதில், பலருக்கு தலைமுடி தொடர்பான பிரச்சனைகளும் அடங்கும்.
முடி உதிர்தல், உடைதல், வறட்சி, நுனி முடி பிளவு உள்ளிட்ட பல தலைமுடி தொடர்பான பிரச்சனைகள் அதிகமாகி வருகின்றன.
கடைகளில் விற்பனையாகும் பொருட்களை வாங்கி பயன்படுத்தினால் தலைமுடி தொடர்பான பிரச்சனைகளுக்கு நிவாரணம் கிடைக்காது. அதே சமயம் வீட்டிலுள்ள சில பொருட்களை கொண்டு வைத்தியம் செய்தால் நிரந்தர தீர்வு கிடைக்கும்.
தலைமுடி ஆரோக்கியத்தில் எண்ணெய் முக்கிய பங்காற்றுகிறது. அப்படியானால் இரவு படுக்கைக்கு செல்லும் முன்னர் எண்ணெய் மசாஜ் கொடுத்து வந்தால் தலைமுடி நீளமாக வளரும் என நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
அந்த வகையில், தலைமுடி வளர்ச்சியை தூண்டும் எண்ணெய் வகைகள் என்னென்ன? அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
தலைமுடி வளர்ச்சி

1. தேங்காய் எண்ணெய் மசாஜ்
தமிழர்களின் பண்பாட்டி தலைக்கு தேங்காய் எண்ணெய் தடவி, மசாஜ் செய்து குளிப்பது வழக்கமாகவே உள்ளது. இந்த எண்ணெய் தலைமுடிக்கு தேவையான புரோட்டீன் இழப்பை தடுத்து தலைமுடி உடைவதை தடுக்கிறது. தேங்காய் எண்ணெயை தலைக்கு தடவுவதற்கு முன்னர் வெதுவெதுப்பாக சூடேற்றிக் கொள்ள வேண்டும். முதல் நாள் தலைக்கு வைத்து மசாஜ் செய்து விட்டு, மறுநாள் காலையில் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.

2. விளக்கெண்ணெய் மசாஜ்
வழக்கமாக நாம் பயன்படுத்தும் விளக்கெண்ணெயில் ரிசினோலியிக் அமிலம் மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கி, தலைமுடி வளர்ச்சியை அதிகப்படுத்தும்.
விளக்கெண்ணெயை தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் இருந்தால் அவைகளுடன் கலந்து தலைக்கு தடவலாம். மறுநாள் காலையில் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலசினால் தலைமுடி பாதிப்புக்கள் குறையும்.

3. நெல்லிக்காய் எண்ணெய் மசாஜ்
நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக உள்ளது என கேள்விபட்டிருப்போம். அதே போன்று எண்ணெய்யிலும் சத்துக்கள் உள்ளன. இவை தலைமுடிக்கு தேவையான ஆரோக்கியத்தை கொடுத்து, தலைமுடி வளர்ச்சியை தூண்டுகிறது. நெல்லிக்காய் எண்ணெய் தடவி இரவு முழுவதும் ஊற கழுவினால் தலைமுடியில் நல்ல மாற்றத்தை பார்க்கலாம்.

4. ஆலிவ் ஆயில் மசாஜ்
ஆலிவ் ஆயிலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. இதனை தலைமுடிக்கு பயன்படுத்தும் பொழுது பிளவுபட்டிருக்கும் தலைமுடி கூட ஆரோக்கியமாக இருக்கும். வெதுவெதுப்பாக சூடேற்றி, தலையில் தடவி மசாஜ் செய்து வந்தால் தலைமுடி பார்ப்பதற்கு ஆரோக்கியமாக இருக்கும்.

5. வெங்காய எண்ணெய் மசாஜ்
வெங்காய எண்ணெயில் சல்பர் அதிகமாக உள்ளது என படித்திருப்போம். இதனால் கொலாஜன் உற்பத்தி அதிகமாக நடந்து தலைமுடியின் வேர்க்கால்களை வலுப்படுத்துகிறது. வெங்காய எண்ணெயை தலையில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து விட்டு, மறுநாள் காலையில் குளித்தால் தலைமுடி இடுப்பு வரை வளரும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |