இரவில் தூக்கம் வராமல் கஷ்டப்படுறீங்களா? இதை மட்டும் செய்து பாருங்க
இரவில் சரியாக தூக்கம் வரவேண்டும் என்றால் சில தூங்கும் முன்பு என்ன செய்யதால் பலன் கிடைக்கும் என்பதை நாம் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் பலரும் தூக்கம் வராமல் திணறுகின்றனர். இதற்காக மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொண்டு அதனையே பழக்கிக் கொண்டும் இருக்கின்றனர்.
ஆனால் தியானம் மேற்கொண்டால் தூக்கமின்மை பிரச்சனையிலிருந்து விடுபடலாம். தற்போது பலரும் காலை நேரத்தில் மட்டுமே தியானம் மேற்கொள்வார்கள். ஆனால் இரவிலும் தியானம் செய்தால் நல்ல பலனைப் பெறலாம்.
தூங்கும் முன்பு தியானம்
தூங்கும் முன்பு தியானம் மேற்கொண்டால் மன அழுத்தம் மற்றும் பதட்டம் றுவைகின்றது. தியானம் உடலில் ஓய்வு மறுமொழியைத் தூண்டுகின்றது. மன அழுத்தத்திற்கு காரணமான ஹார்மோன் கார்டிசோலின் அளவை குறைப்பதுடன், மனக் குளறுபடிகளையும் குறைக்கின்றது.
மேலும் நீங்கள் தியானம் மேற்கொண்டால் மனதளவிலும், உடலளவிலும் ஆழ்ந்த ஓய்வை பெறுவதுடன், தசைகளும் படிப்படியாக ஓய்வு எடுக்கின்றது. இதயத் துடிப்பு மெதுவாவதுடன், மன அமைதியும் ஏற்படுகின்றது.
FG TRADE / GETTY IMAGE
தூங்கும் முன்பு நீங்கள் மேற்கொள்ளும் தியானம் தூக்கத்தின் தரத்தினை மேம்படுத்துகின்றது. தூங்குவதற்கு ஆகும் நேரத்தையும் குறைக்கின்றது.
இரவில் தியானம் மேற்கொண்டால் மன தெளிவு அதிகரிப்பதுடன், மனதை அமைதியாக வைத்திருக்கவும் உதவுகின்றது.
FG TRADE / GETTY IMAGE
ரத்த அழுத்தத்தைக் குறைப்பதுடன், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் செய்கின்றது. தலைவலி, தசை வலி, செரிமான பிரச்சனை போன்ற அறிகுறிகளையும் குறைக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |