இரவு உணவுக்கு பின்னர் இந்த விடயங்களை தவறியும் பண்ணாதீங்க... ஆபத்து உறுதி
பொதுவாகவே தற்காலத்தில் ஆண்கள் பெண்கள் என இருபாலாரும் வேலைக்கு செல்பவர்களாகவே இருக்கின்றார்கள்.
இதனால் தங்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நடிவடிக்கைகளில் ஈடுப்படுவது வெகுவாக அருகிவருகின்றது.
அதுமட்டுமன்றி பெரும்பாலானவர்கள் தங்களின் காலை உணவு மற்றும் மதிய உணவை எப்போதும் அவசமாகவே சாப்பிட வேண்டிய நிலையில் ஏற்பபடகின்றது.
அதனால் இரவு உணவை மட்டும் தான் ஆறுதலாக சாப்பிட கிடைக்கும். சிலர் இரவு உணவு சாப்பிட்ட உடன் தூங்க சென்று வழிடுவார்கள் சிலர் சாப்பிட்ட பின்னர் குளிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.
இப்படி பலரும் இரவு உணவுக்கு பின்னர் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு இன்றி கடைப்பிடித்து வரும் சில பழக்கங்கள் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும்.
அப்படி இரவு உணவை சாப்பிட்ட பின்னர் ஒருபோதும் செய்யவே கூடாத விடயங்கள் தொடர்பிலும் அதனால் ஏற்படும் பாதக விளைவுகள் குறித்தும் இந்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
இரவு உணவுக்கு பின்னர் செய்யக்கூடாதவை
பெரும்பாலான மக்கள் தங்கள் உடல் எடை அதிகரித்துவிடக்கூடாது என்பதற்காக இரவு உணவு சாப்பிட்ட உடன் நடைப்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
ஆனால் இப்படி செய்வதால் செரிமானம் தாமதமாகின்றது. சாப்பிட்டு குறைந்தது ஒரு மணிநேரம் கழித்து பின்னர் நடைப்பயிற்சி செய்வதால் பாதகம் எதுவும் ஏற்படாது.
பெரும்பாலானவர்களுக்கு இரவு உணவை சாப்பிட்ட உடனேயே தூங்க செல்லும் பழக்கம் காணப்படுகின்றது. இது மிகவும் அபாயகரமான ஆரோக்கிய பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். குறைந்தது 30 நிமிடங்களின் பின்னர் படுக்கைக்கு செல்வது சிறந்தது.
இரவு உணவுக்கு பின்னர் பழங்கள் சாப்பிடும் வழக்கமும் பெரும்பாலானவர்கள் மத்தியில் காணப்படுகின்றது. இது முற்றிலும் தவறான பழக்கமாகும். அதனால் இரவில் வயிறு வீக்கமடைதல் மற்றும் வாயுப்பிரச்சினைகள் ஏற்படுடக்கூடும்.
சாப்பிட்ட உடனேயே குளிப்பதும் பாதக தாக்கத்தை ஏற்படுத்தும்.உடலின் மற்ற பாகங்களுக்குச் செல்லும் ரத்தம் செரிமான மண்டலத்துக்குச் சரியாகப் போவதில்லை. இதனால் செரிமான அமைப்பு சீராக இயங்க முடியாத நிலை ஏற்படும்.
பெரும்பாலானவர்கள் இரவு உணவுக்கு பின்னர் உடனடியாக பல்துலக்கும் பழக்கத்தை கொண்டிருக்கின்றார்கள். இது பற்களில் இயற்கையாக காணப்படும் எனாமலை அழித்துவிடுகின்றது. எனவே சாப்பிட்டு 30 நிமிடம் தொடக்கம் ஒரு மணிநேரத்துக்கு பின்னர் பல்துலக்குவது சிறந்தது.
அதுமட்டுடன்றி புகைப்பழகம் புற்றுநோயை ஏற்படுத்தும் என்பது அனைவரும் அறிந்ததே. இரவு உணவிற்குப் பிறகு ஒருபோதும் உடனடியாக புகைபிடிக்கக்கூடாது, இரவு உணவிற்குப் பின்னர் புகைபிடிப்பது சாதாரண நேரத்தில் புகைபிடிப்பதை விட புற்றுநோய் அபாயத்தை பல மடங்கு அதிகரிக்கின்றது. எனவே இவ்வாறான தவறுகளை ஒருபோதும் செய்யவே கூடாது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |