டீ-யில் இஞ்சி போட்டு குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?
பொதுவாக வீடுகளில் சமைக்கும் போது வாசணைக்காக இஞ்சி, மஞ்சள், கலங்கல், ஏலக்காய் ஆகிய பொருட்களை பயன்படுத்துவார்கள்.
அதில் இஞ்சி சுவைக்கும் பொழுது கொஞ்சம் காரசாரமாக இருக்கும். ஆனால் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன.
காலையில் எழுந்தவுடன் வெறும் டீயை குடிக்காமல் கிராம்பு, இஞ்சி, ஏலக்காய் ஆகிய பொருட்களை சேர்த்து குடித்தால் உடல் நிலை சரியாக இருக்கும்.
அந்த வகையில் இஞ்சி டீ குடித்தால் என்ன நடக்கும் என்பதனை தொடர்ந்து நாம் தெரிந்து கொள்வோம்.
இஞ்சியில் டீ கலந்து குடித்தால் என்ன நடக்கும்?
1. தினமும் காலையில் டீயில் இஞ்சி கலந்து குடித்தால் அதிகளவு ஆண்டி ஆக்ஸிடெண்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது. ஆகையால் உங்களுக்கு வரக்கூடிய குமட்டலை இது தடுக்கும். மேலும், ஆக்ஸிடேடிவ் அழுத்தத்தையும் இவை குறைக்கிறது.
2. வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் உடல் நிலை குறைய ஆரம்பிக்கும். டயட்டில் எடையை குறைக்க நினைப்பவர்கள் இவ்வாறு குடிக்கலாம்.
3. மனித உடலில் அதிகப்படியான பாக்டீரியா உள்ளது. இவ்வாறு தினமும் இஞ்சி சாப்பிடுவதால் , இ-கோலி மற்றும் ஷிகெலா போன்ற பாக்டீரியாக்கள் உங்கள் உடலில் வளர விடாமல் தடுக்கலாம். அத்துடன் நமது வாய்களில் பாக்டீரியா உற்பத்தி ஆவதை தடுத்து, நமது ஆரோக்கியத்திற்கு உதவி செய்கிறது.
4. நீரிழிவு நோயாளிகளுக்கு இஞ்சி சிறந்த மருந்தாக இருக்கின்றது. இவ்வாறு காலையில் இஞ்சி கலந்த தண்ணீர் குடித்து வந்தால் சர்க்கரை அளவு வெகுவாக குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
5. மாதவிடாய் காலங்களில் அதிகமாக வயிறு வலி இருக்கும். இந்த நேரங்களில் இஞ்சி சாப்பிட வேண்டும். ஏனெனின் இஞ்சியில் அசிடாமினோபின், கஃபைன், நோவாஃபின் இருக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |