சர்க்கரை நோயாளிகள் இஞ்சி டீ குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா? இவ்வளவு பக்க விளைவுகள் இருக்கா?
இஞ்சி நிறைய நன்மைகளை தரக்கூடிய ஓர் அற்புமான மசாலா பொருளாகும்.
பெரும்பாலும் உணவுகளில் நாம் இஞ்சியை பயன்படுத்தி வருகிறோம்.இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருப்பதால் இதை மாத்திரை வடிவில் கூட பயன்படுத்தி வருவது உண்டு.
இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுவதால் வலி மற்றும் வீக்கத்தை போக்க உதவுகிறது.
இது உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்கும் ஒரு ஆக்ஸிஜனேற்றயாகும்.
இஞ்சி புற்றுநோயை குறைக்கும் ஆற்றலை கொண்டுள்ளது. இப்படி ஏராளமான நன்மைகளை அளிக்கும் இஞ்சியை சிலர் சாப்பிட்டால் பாரிய பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
சாதாரணமாக எவ்வளவு எடுத்து கொள்ள வேண்டும்?
ஒருவர் தினசரி அளவில் இஞ்சியை நாள் ஒன்றுக்கு 4 கிராமுக்கு மேல் சேர்க்க கூடாது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
- இஞ்சி டீயை அதிக அளவில் குடிப்பதனால் நமது செரிமான அமைப்பு பாதித்து வாய் எரிச்சல், வயிற்றுப்போக்கு, ஒமட்டல் என பல வகையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
- இஞ்சி டீயை அளவுக்கு அதிகமாக குடிப்பதனால் நமது உடலில் அமிலம் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து அசிடிட்டியை ஏற்படுத்துகிறது.
- சர்க்கரை நோய் இருப்பவர்கள் இஞ்சி டீயை அதிக அளவில் குடிக்கக் கூடாது. ஏனெனில் இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைத்து நோய் ஏற்படுத்துகிறது.
- உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் இஞ்சி டீயை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது இரத்த அழுத்தத்தை குறைத்து இதய படபடப்பை ஏற்படுத்துகிறது.
- இஞ்சி டீயை அதிக அளவில் குடிப்பதனால் அமைதியற்ற நிலை, தூக்கமின்மை ஏற்பட்டு நெஞ்சு எரிச்சல் அதிகமாகி உயிருக்கு ஆபத்து ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. அறுவைசிகிச்சை செய்யும் முன்பு இஞ்சி டீயை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
- ஏனென்றால் மயக்கத்திற்காக கொடுக்கப்படும் மருந்து இஞ்சி டீ-உடன் எதிர் செயலாற்றும். எனவே, அறுவைசிகிச்சை செய்த இடத்தில் புண், இரத்தக்கசிவுப் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
- பித்தப்பை கல் பிரச்சனை உள்ளவர்கள் இஞ்சி டீயை குடிப்பதனால் பித்த நீர் அதிகமாக சுரந்து மிகுந்த வலியை ஏற்படுத்தும். எனவே பித்தப்பை கல் பிரச்சனை உள்ளவர்கள் இஞ்சி டீயை தவிர்க்கவும்.
- கற்பிணிப் பெண்களுக்கு இஞ்சி டீ வாந்தியை ஏற்படுத்தும்.
- சில சமயம் கற்பிணிப் பெண்கள் குடிப்பதால் அது வயிற்றில் உள்ள குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
- அளவிற்கு அதிகமாக இஞ்சி டீயை குடிப்பதனால் இரப்பைப் பிரச்சனை ஏற்படும். எனவே அளவாக குடிப்பது நல்லது.
வெறும் வயிற்றில் முட்டைக்கோஸ் தண்ணீர் குடித்தால் இத்தனை நன்மைகளா?