நீரிழிவு நோயாளிகளுக்கு அதிகமாக உதிரும் முடி... காரணம் என்ன?
நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பல்வேறு இணை நோய்கள் வரும் என்று கூறப்படுகின்றது. அதிலும் சிறுநீரகம், கண் சம்பந்தப்பட்ட நோய்கள் கட்டாயம் வரும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
நீரிழிவு நோயாளிகளுக்கு முடி உதிர்வு
இந்நிலையில் சர்க்கரை நோயாளிகளுக்கு முடி உதிரும் பிரச்சினை அதிகமாக இருக்குமாம். ஏனெனில் இந்நோயினால் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு ரத்த ஓட்டம் தடைபடுவதால் இந்த முடி உதிர்வு ஏற்படுகின்றது.
மேலும் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தாலும், பாக்டீரியா தொற்று காணப்பட்டாலும் முடி உதிர்வு அதிகமாகின்றது. இந்த முடி உதிர்வு பிரச்சினையை தடுப்பதற்கு நீரிழிவு நோயாளிகள் சர்க்கரையின் அளவை கட்டுப்பாடாக வைத்திருக்க வேண்டும்.
மேலும் இந்நோயின் காரணமாக ஏற்படும் அலர்ஜி முடியின் வேர்களை சேதமாக்குவதாலும், இந்நோயாளிகள் புரதச்சத்துக்களை அதிகமாக சேர்த்து முடியின் வலிமையை அதிகரிக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |