நீரிழிவு நோயாளிக்கு வெந்தயம் கொடுக்கும் சூப்பரான மருத்துவம்! இனி கவலை வேண்டாம்
பொதுவாக தினமும் 25-100 கிராம் வெந்தயம் உட்கொள்வதால் இரத்த சோகை தாக்கத்தை இலகுவில் கட்டுபடுத்த முடியும் என மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
வெந்தயத்தில் இருக்கும் மருத்துவ குணங்கள்
வெந்தயத்தில் ஃபோலிக் அமிலம், ரிபோஃப்ளேவின், தாமிரம், பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மாங்கனீஸ், வைட்டமின் ஏ, பி6, சி, கே ஆகிய ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருக்கிறது.
இதனால் வெந்தயத்தை உடல் எடை குறைப்பு, வயிற்று வலி, உடலில் இருக்கும் சூட்டை தனிப்பதற்கு போன்ற பல பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.
இதன்படி, இன்சுலினைச் சார்ந்த நீரிழிவு நோயாளர்களுக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது இதனை குறைப்பதற்கு வெந்தயம் உதவுகிறது.
இதனை தொடர்ந்து இந்திய மருத்துவம் வெந்தயம் தொடர்பான ஆராய்ச்சியொன்றை மேற்க் கொண்டுள்ளது.
அந்தவகையில் ஆராய்ச்சியில் கண்டுபிடித்தவைகளை தொடர்ந்து தெரிந்துக் கொள்வோம்.
நீரழிவு நோயால் அதிகம் கஷ்டபடுகிறீர்களா?
நாளொன்றுக்கு 25-100 கிராம் வெந்தயம் உட்கொள்வது ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம் என்பதை கண்டுபிடித்துள்ளது.
மேலும் உடலில் இருக்கும் குளுக்கோஸின் சகிப்புத்தன்மைக்கு வெந்தயம் உதவுகிறது மற்றும் இதில் அதிகமான நார்ச்சத்துக்கள் இருப்பதால் செரிமானம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை மெதுவாக உறிஞ்சுவதன் மூலம் இரதத்திலிருக்கும் சக்கரையின் அளவை கட்டுபடுத்துகிறது.
நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை வெந்தயம் குறைவாக உறிஞ்சுவதால் ரத்தத்திலிருக்கும் குளுக்கோஸின் அளவுக் கட்டுப்படுத்துகிறது.
பொதுவாக சில பெண்கள் அதிகம் வெந்தயத்தை உணவில் சேர்ப்பார்கள் இது கரையக்கூடிய நார்ச்சத்து என்பதால் குடலுக்குள் இருக்கும் உறிஞ்சும் சக்கரையின் அளவை தாமதப்படுத்தும்.
இதனை தொடர்ந்து வெந்தயத்தில் ஹைட்ராக்ஸிஸ்லூசின் எனப்படும் அமினோஅல்கனோயிக் அமிலம் உள்ளது, இது நீரிழிவிற்கு எதிர்ப்பு பண்பைக் கொண்டுள்ளது. இதனால் நீரழிவு நோயாளர்கள் இதனை தொடர்ந்து எடுத்துக் கொள்வார்கள்.
இது மட்டுமன்றி உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த வெந்தயத்தை நீருடன் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.