இறப்பதற்கு முன்பு ஆட்டோவில் மருத்துவமனைக்கு சென்றது ஏன்? மயில்சாமி மகன் உடைத்த உண்மை
நடிகர் மயில்சாமி கடந்த 18ம் தேதி மகா சிவராத்திரியில் பூஜையில் கலந்து கொண்டு வீட்டிற்கு வந்த சில மணிநேரத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார்.
நடிகர் மயில்சாமி
நடிகர் மயில்சாமி கடந்த வாரத்தில் மாரடைப்பினால் உயிரிழந்த நிலையில், இவரது மரணத்தைக் குறித்து பல வதந்திகள் பரவி வந்தது. இதற்கு அவரது மகன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தந்தையின் மரணத்தை குறித்து மகன் கூறுகையில், "எனது அப்பாவின் இறப்பு குறித்து சரியான கிளாரிட்டி இல்லாமல், ஒவ்வொரு சேனலும் ஒவ்வொரு விதமாக பேசி வருகின்றனர்.
எனது தந்தையுடன் நான் தான் இருந்தேன்... டப்பிங் முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த பின்பு நாங்கள் குடும்பமாக மேகநாதேஸ்வரர் கோவிலுக்கு சென்றுவிட்டு, அங்கு சிவமணி சார் உடன் பேசிக்கிட்டு, பாடல் பாடிக்கொண்டிருந்தார்.
இரவு 11 மணிக்கு நல்லா பாடல் கேட்டு மகிழ்ச்சியாக இருந்த நிலையில், 2.45 மணிக்கு வேறொரு கோவிலுக்கு செல்வதற்கு அப்பா கூறினார். அப்போ சிவமணி சார் நீங்க ஹாட் பேஷண்ட் வேண்டாம் வீட்டுக்கு போய் ஓய்வு எடுங்கனு கூறினார்.
பின்பு அப்பா நாங்கள் எல்லாரும் வீட்டிற்கு வந்த நிலையில், மகிழ்ச்சியாக பேசிக்கொண்டிருந்தோம். அப்போது பசிக்குது சாப்பிடலாமானு கேட்ட போது, அம்மா இட்லி செய்து கொடுத்தாங்க அனைவரும் சாப்பிட்டோம்.
அதன் பின்பு செய்தி பார்த்துட்டு இருந்தார்.. 10 நிமிடங்கள் கழித்து சாப்பிட்டது நெஞ்சிலே நிற்கிறது என்று கூறியதும், சுடுதண்ணீர் கொடுத்தோம். குடித்துவிட்டு படுக்க சென்றார்.
மீண்டும் எழுந்து வந்தவர் சாப்பாடு டைஜஸ்ட் ஆகவில்லை என்று பேசியிருந்த நிலையில், 10 நிமிடம் கழித்து அம்மா வந்து அப்பா மூச்சுவிட முடியாமல் கஷ்டப்படுறாங்கனு கூறியதும் அழைத்துக் கொண்டு, உடனே அருகில் மருத்துவனைக்கு செல்ல காரில் சென்றோம்.
ஜங்ஷன் போகும்போது அப்பா என் மேல சாய்ந்துவிட்டார்... என்னால் கார் ஓட்டமுடியாமல் ஆனதால் அருகில் ஆட்டோ பிடித்து மருத்துவமனைக்கு சென்றோம். அங்கே போனால் ஆல்ரெடி அப்பா இறந்துட்டாங்கனு கூறினாங்க... எனக்கு நம்பிக்கை இருந்தது கோமாக்கு போயிருப்பாங்க... சிபிஆர் எதாவது செய்து காப்பாற்றிடுவாங்க. என்று தான் நினைத்திருந்தேன்.
பின்பு ராமசந்திரா மருத்துவமனைக்கு சென்ற போதும், மருத்துவர் இறந்துவிட்டார் என்று கூறிய பின்பு வீட்டுக்கு சென்று பின்பு அனைத்து வேலைகளையும் செய்தோம் என தந்தை மயில்சாமி மறைவு பற்றிய வதந்திக்கு விளக்கம் கொடுத்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.