மயில்சாமி இறப்பதற்கு முன் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன?
பிரபல நகைச்சுவை நடிகரான மயில்சாமி இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் காலமானது ஒட்டுமொத்த திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
யாராக இருந்தாலும் உதவி என்று வந்தவுடன் தன்னுடைய சக்திக்கும் மீறி கொடை வள்ளலாக திகழ்ந்து வந்தவர் மயில்சாமி.
அதேநேரத்தில் தவறு என்று தெரிந்தவுடன் தட்டிக்கேட்டவும் தயங்கமாட்டார் என இவருடன் நடித்த சக நடிகர்கள் உருக்கத்துடன் தெரிவித்து வருகின்றனர்.
எத்தனை மணிக்கு யார் போன் செய்தாலும் உடனடியாக எடுத்து பேசக்கூடியவராம், பேரிடர் காலங்களில் கூட மக்களுக்கு தொண்டாற்றி வந்தவர்.
இவரது திடீர் மரணம் ஒட்டுமொத்த திரையுலகம் மட்டுமின்றி அவரது ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நேற்றிரவு நடந்தது என்ன?
தீவிர சிவ பக்தரான மயில்சாமி சிவராத்திரியையொட்டி சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்றுள்ளார்.
அங்கு பூஜையில் டிரம்ஸ் சிவமணியுடன் கலந்து கொண்டு அதிகாலை 3.30 மணியளவில் வீட்டுக்கு வந்துள்ளார்.
சுமார் அரைமணி நேரம் கழித்து பசிக்கிறது என கூறினாராம், 4 மணியளவில் இட்லி சாப்பிட்டதும் ஏதொவொரு அசௌகரியத்தை உணர நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார்.
உடனடியாக பதறியடித்த குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது, மயில்சாமியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அடுத்ததாக மயில்சாமியின் உடல் அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது, திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் நாளை காலை இறுதிச்சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.