உயிரிழப்பதற்கு முன்னர் கூட சினிமாவிற்காக உழைத்த மயில்சாமி: கடைசியாக வெளியான வீடியோ!
இன்று அதிகாலை உயிரிழந்த நகைச்சுவை நடிகரின் கடைசி வீடியோ ஒன்று தற்போது வெளியாகியிருந்தது. இதனைப் பார்த்த ரசிகர்கள் இன்னும் சோகத்தில் ஆழ்ந்திருக்கின்றனர்.
மறைந்த காமெடியன்
தாவணி கனவுகள் என்ற திரைப்படத்தில் தனது பயணத்தை ஆரம்பித்து உடன்பால் திரைப்படம் வரைக்கும் தனது நடிப்பாலும் நகைச்சுவையாலும் கட்டிப்போட்டவர் தான் நடிகர் மயில்சாமி.
சிவனே கதி எனக் கிடந்த சிவபக்தனுக்கு சிவபெருமானின் திருநாளான சிவராத்திரி தினத்திலே உயிரிழந்து சிவபக்தன் ஆகிவிட்டார்.
தனக்கு என இருப்பவற்றை மற்றவர்களுக்கு கொடுத்து அழகுபார்த்தவர். வாரி வாரி வழங்குவதில் வள்ளலாக இருந்தவர்.
இவர் நடிக்கும் தொழிலை மாத்திரமல்ல அசத்தபோவது யாரு நிகழ்ச்சியிலும் தொகுப்பாளராக இவர் பணியாற்றி இருக்கிறார். இவர் தமிழில் மாத்திரம் 200இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
மேலும், சில படங்களுக்கு டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி இருக்கிறார். இவ்வாறு பன்முகத்திறமையாளனாக வலம் வந்த மயில்சாமி இன்று அதிகாலை 3.30 மணியளவில் மாரடைப்பால் உயிரிழந்திருக்கிறார்.
இவரின் இந்த மரணச் செய்தி திரையுலகினரை மாத்திரமல்ல இவரினால் ஒரு வேளை உணவு உண்டவர்கள் கூட இவருக்காக கதறி அழது புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்.
கடைசி வீடியோ
இவர் படம் ஒன்றிற்காக டப்பிங் செய்த வீடியோ காட்சியொன்று தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
சில படங்களுக்கு டப்பிங் கலைஞராக பணியாற்றி வந்த இவர் நேற்றைய தினம் படம் ஒன்றிற்காக டப்பிக் கொடுத்து முடித்து விட்டு தான் சென்றிருக்கிறார்.
இதுதான் இவரின் இறுதி பேச்சாக இருக்கும் என்று யாரும் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.