மயில்சாமி பாக்கெட்டில் கடைசியாக இருந்த பணம் எவ்வளவு தெரியுமா?
மறைந்த நடிகர் மயில்சாமி பாக்கெட்டில் கடைசியாக இருந்த பணம் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நகைச்சுவை நடிகர் மயில்சாமி உயிரிழப்பு
தமிழ் சினிமாவின் முக்கிய நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் மயில்சாமி.
சமீபத்தில் நடந்த சிவராத்திரி பூஜையில் ட்ரம்ஸ் சிவமணியுடன் இணைந்து கலந்து கொண்டு மகிழ்ச்சியாக இருந்தார்.
கோயிலுக்கு சென்றுவிட்டு மறுநாள் அதிகாலைக்கு இல்லம் திரும்பிய மயில்சாமிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மயில்சாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மயில்சாமியின் இறப்பு தமிழ் சினிமாத்துறையிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சினிமாத்துறையினரும், ரசிகர்களும் மயில்சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
கடைசியாக இருந்த பணம்
இந்நிலையில், மயில்சாமி கடைசியாக நடித்துள்ள‘கிளாஸ்மேட்ஸ்’ படம். இப்படத்தை சரவண சக்தி இயக்கியுள்ளார். நேற்று இப்படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மயில்சாமியின் மகன்கள் அன்பு, யுவன் இருவரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், நடிகர் மயில்சாமிக்கு அஞ்சலி செய்யப்பட்டது. மூத்த காமெடி நடிகர் செந்தில் உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அப்போது மயில்சாமியின் மகன்கள் இருவரும் அவர்களது அப்பா குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
அப்போது அவர்கள் பேசுகையில்,
அப்பா எங்களுக்கு எப்போதும் நண்பர்தான். நண்பர் போலதான் நடந்து கொள்வார். இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவி செய்ய வேண்டும் என்று எங்களிடம் அடிக்கடி கூறிக்கொண்டே இருப்பார். புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தான் என் அப்பாவுக்கு ரோல் மாடல்.
பணம் இல்லாத நேரத்தில் யாரும் உதவிக்கேட்டு வந்தால், கடவுளிடம் சண்டை போடுவார். "எங்கிட்ட பணம் இல்லைன்னு தெரிஞ்சும் ஏன் என்னிடம் உதவிக் கேட்டு மத்தவங்கள அனுப்பி வைக்குற" என்று உரிமையோடு கோபப்படுவார். என் அப்பாவிற்கு ஆசை... நாங்க இரண்டு பேரும் நல்ல நடிகர்களாக வர வேண்டும் என்று. அது எதிர்பார்த்தபடி நடக்கவில்லை என்றார்.
மேடையில், மயில்சாமியுடனயே இருக்கும் சக்தி என்பவரை அவரது மகன்கள் அறிமுகம் செய்து வைத்தனர். அப்போது,
மேடையில் சக்தி பேசுகையில்,
மயில்சாமி கடைசியாக ஒரு படத்தில் நடிக்க, ரூ.30 ஆயிரம் சம்பளமாக வாங்கினார். அதில், 25000 ரூபாய் ஒருவருக்கும், எனக்கு கொஞ்சம் பணமும் கொடுத்தார். மிச்சம் இருந்த ஆயிரம் ரூபாயை அவரது மகன்களுக்கும் கொடுத்து விட்டார்.
எல்லா பணத்தையும் கொடுத்து விட்டு, அவரது சட்டை பாக்கெட்டில் வெறும் ரூ.30 யை மட்டும் வைத்துக்கொண்டார் என்று கூறி கண்கலங்கினார்.