செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் மாதத்தில் ராஜ வாழ்க்கை பெறபோகும் 3 ராசிகள்!
ஜோதிட கணிப்புகளில் கிரக பெயர்ச்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றது என்பது அனைவரும் அறிந்தது தான். கிரக நிலைகளில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் கூட 12 ராசிகளின் வாழ்ககையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படும்.
அந்தவகையில், போர் கிரமாக செவ்வாய் தற்போது, கும்ப ராசியில் பயணித்து வரும் நிலையில் மார்ச் 03 ஆம் திகதி சதயம் நட்சத்திரத்திற்குள் செல்லவுள்ளார்.

குறித்த சதயம் நட்சத்திரத்தின் அதிபதி ராகு என்பதால், ராகுவின் நட்சத்திரத்திற்குள் செவ்வாய் செல்வதால், அதன் தாக்கம் 12 ராசிகளிலும் சில சாதக பாதக மாற்றங்களை ஏற்படுத்தினாலும், 3 ராசியினரின் வாழ்வில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தப்போகின்றது.
அப்படி செவ்வாய், ராகு இணைவால் அதாவது, செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
சிம்மம்

செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசியில் பிறப்பெடுத்தவர்களின் தொழில் வாழ்க்கையில் அமோக வளர்ச்சி உண்டாகும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
நிதி ரீதியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு கூடி வரும். நீண்ட கால கடன் தொல்லைகளுக்கு முடிவு கட்டுவீர்கள்.
புதிய முயற்சிகளால் வருமானம் அதிகரிக்கும். புதிய தொழில் ஆரம்பிக்க வேண்டும் என நீண்ட காலம் போராடிவர்களுக்கு வெற்றி கிடைக்கும். எதிர்பாரத பணவரவால் மகிழ்ச்சி காத்திருக்கின்றது.
தனுசு

செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் தனுசு ராசியினர் தொழில் ரீதியில் அசுர வளர்ச்சி அடைவார்கள்.
வெளிநாட்டு பயணங்கள் மற்றும் வெளிநாட்டில் பணிப்புரியும் வாய்ப்பு தானாகவே தேடி வரும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
ஆன்மீக விடயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். மனநிலையில் தெளிவு பிறக்கும். இந்த ராசியினருக்கு மார்ச் மாதம் முழுவதும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும் வாய்ப்பு காணப்புடுகின்து.
கும்பம்

செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களின் வாழ்வில் பல்வேறு விடயங்களிலும் சாதக மாற்றங்கள் உண்டாகும். இவர்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறும்.
சதயம் நட்சத்திரமானது சனி பகவான் ஆளும் கும்பத்தில் உள்ளதால், மருத்துவ துறையில் பணிபுரிவோருக்கு அசுர வளர்ச்சி ஏற்படும்.
இந்த ராசியினரின் நீ்ண்ட கால திட்டங்கள் வெற்றியடையும். இவர்களின் ஆரோக்கிய பிரச்சினைகள் நீங்கி உடல் சீராக இருக்கும். பொருளாதார ரீதியில் மார்ச் மாதம் முழுவதும் நல்ல வளர்ச்சி உண்டாகும்.மொத்தத்தில் இவர்களின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகின்றது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |