கும்ப ராசியில் உதயமாகும் செவ்வாய்: மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்
ஜோதிட ரீதியில் கிரக நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் கிரக சேர்க்கைகளால் உருவாகும் ராஜ யேகங்கள் என்பன 12 ராசிகளின் வாழ்க்கையிலும் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என குறிப்பிடப்படுகின்றது.
அந்தவகையில், நவகிரகங்களின் தளபதியாக அறியப்படும் செவ்வாய் பெயர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. போர் கிரகமான செவ்வாய் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவதுடன் அவ்வப்போது அஸ்தமனமாகி உதயமாகுவார்.

இந்நிலையில் மார்ச் 26 ஆம் திகதி சனி பகவானின் கும்ப ராசியில் செவ்வாய் உதயமாகவுள்ளார். செவ்வாயும் சனியும் பகை உணர்வு கொண்ட கிரகங்கள் என்பதால், அதன் தாக்கம் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மோசமான விளைவுகளை கொடுக்கும்.
செவ்வாய் உதயமாவதால், தனிப்பட்ட வாழ்க்கை, பொருளாதாரம், மற்றும் தொழில் விடயடங்களில் மிகுந்த எச்சரிக்ரகையுடன் இருக்க வேண்டிய ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்

மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் செவ்வாய் உதயமாவதால் இவர்கள் புதிய முயற்சிகளை இந்த காலகட்டத்தில் தவிர்த்துக்கொள்வது நல்லது. அதிக தடைகளை சந்திக்க நேரிடும்.
குறிப்பாக தொழில் சார்ந்து எடுக்கும் புதிய முடிவுகளால் பாரிய ஏமாற்றம் மற்றும் நிதி இழப்பை சந்திக்க நேரிடும். செலவு செய்வதிலும் பணத்தை கையாளுவதிலும் அதிக கவனம் தேவை.
பணியிடத்தில் சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுப்படுவதை முற்றிலும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். சிறிய வாய் தர்க்கங்கள் கூட பெரிய மோதலாக மாற அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.
மகரம்

மகர ராசியின் 2 ஆவது வீட்டில் செவ்வாய் உதயமாவதால் மகர ராசியில் பிறந்தவர்கள் ஆரோக்கியம் மற்றும் உணவு முறையில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
குடும்ப உறவுகளிடைய ஒற்றுமையின்னை ஏற்படும். அதனால் தொழிலில் கவனம் செலுத்த முடியாத நிலை உருவாகும் வாய்ப்பு காணப்படுகின்றது. முடிந்தவரை குடுப்ப உறுப்பினர்களின் வாக்குவாதங்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
இந்த காலகட்டத்தில் பெரிய தொகை பணத்தை இழப்பதற்கு அதிக வாய்ப்பு காணப்படுவதால், புதிய தொழில் ஆரம்பிக்கும் முயற்ச்சி அல்லது புதிய முதலீடுகளை தவிர்த்துக்கொள்வது நல்லது.
மீனம்

மீன ராசியின் 12 ஆவது வீட்டில் செவ்வாய் உதயமாவதால் இந்த ராசியில் பிறந்தவர்கள் பணவிடயங்களில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
தேவையற்ற செலவுகளையும், சாலைகளில் விதி மீறல்களையும் முற்றிலும் தவிர்ப்பது நல்லது. இந்த விடயங்களால் தான் பெரிய சிக்கல்களில் சிக்கிக்கொள்ளும் நிலை உருவாகும்.
பேசும் போது வார்த்தைகளை மிகுந்த கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். தவறான வார்த்தைகளால் பெரிய இழப்பு காத்திருக்கின்றது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |