பாக்கியலட்சுமி சீரியல் கோபி வெளியிட்ட உருக்கமான காணொளி - ஆறுதல் கூறிய ரசிகர்கள்
பிரபல டிவி நிகழ்ச்சியில் மக்கள் மனதில் பாக்கியலட்சுமி சீரியல் மூலம் இடம்பிடித்த கோபி தற்போது ஒரு காணொளி வெளியிட்டுள்ளார்.

நடிகர் கோபி
நடிகர் சதீஷ் என்பதை விட பாக்கியலட்சுமி கோபி என்றால் தான் எல்லோருக்கும் தெரியும். அந்த அளவிற்கு பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் நடிப்பு அனைவரையும் கவர்ந்திருக்கும்.
சதீஷ் 90களிலிருந்தே தமிழ் தொலைக்காட்சியில் அறிமுகமானார் அதனை தொடர்ந்து பாக்கியலட்சுமி சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.
இவரது நடிப்பு பெண்கள் முதல் ஆண்கள் வரை அனைவருக்கும் பிடித்து போக இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

கோபியின் காணொளி
இந்த நிலையில் கோபி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு உருக்கமான காணொளி வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் கோபி மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசி உள்ளார். அதில் கடந்த வாரம் அவர் புதிய சீரியல் ஒன்றில் சேர்ந்து நடிக்கப்போவதாகவும் கூறி உள்ளார்.
ஆனால் தற்போது அந்த சீரியல் தனக்கு கிடைக்கவில்லை எனவும் கூறி இருக்கிறார். "நான் கமிட் ஆன அந்த சீரியல் சில காரணங்களால் இப்போது எனக்கு கிடைக்கவில்லை.
அது நம்மை விட்டு போய்விட்டது" என்று அவர் கூறி உள்ளார். மேலும், "சில விஷயங்கள் நம்மை விட்டு போகும் போது அது கஷ்டமாக இருக்கும். ஆனால் பின்னர் அது நமக்கு நன்மையாக மாறும் என்றும் கூறி உள்ளார்.

இப்போ கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது, ஆனாலும் எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புகிறேன் எல்லோரும் என்னை மன்னிச்சிடுங்க" என்று உருக்கமாக கூறி உள்ளார்.
ரசிகர்களின் ஆதரவு நடிகர் சதீஷ்க்கு இந்த வீடியோ வெளியானதும் நடிகர் சதீஷ்க்கு ரசிகர்கள் அதிக அளவில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
சிலர் "நீங்கள் கண்டிப்பாக திரும்ப வருவீர்கள்", "கோபி கதாபாத்திரத்தை நீங்கள் மட்டுமே அந்த அளவுக்கு செய்து காட்ட முடியும்" என்று என்று கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |