கேந்திர யோகம்: ஏப்ரலில் பணமழை இந்த ராசிகளுக்கு தான்
ஜோதிட ரீதியில் நவகிரங்களின் நிலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. ஏனெனில் கிரக பெயர்ச்சிகளும், ஆற்றல் மிக்க கிரகங்களின் சேர்க்கையும் 12 ராசிகளின் வாழ்க்கையிலும் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என்று குறிப்பிடப்படுகின்றது.
அந்தவகையில், நவகிரகங்களின் தளபதியான செவ்வாயும், தேவர்களின் குருவாக கருதப்படும் குருபகவானும் இணைவது அனைத்து ராசிகளிலுமே நேர்மறையான ஆற்றலை கொண்டுவரும்.

குறிப்பாக ஏப்ரல் 18 ஆம் திகதி இந்த இரண்டு கிரகங்களும் ஒரு முக்கியக் கோணத்தில் அமையும்போது ஆற்றல் மிக்க கேந்திர யோகத்தை உருவாக்குகின்றன.
குறித்த யோகமானது அனைத்து ராசிக்காரர்களின் தொழில், பொருளாதாரம், உறவுகள் மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இருப்பினும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜ யோகத்தை வாரி வழங்கப்போகின்றது. அப்படி அதிர்ஷ்டத்தின் உச்ச பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கடகம்

கடக ராசியினருக்கு இந்த கேந்திர யோகமானது நிதி ரீதியில் எதிர்பாராத நன்மைகளை கொடுக்கப்போகின்றது. குறிப்பாக பணியிடத்தில் இருந்து வந்த பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுவீர்கள்.
இந்த யோகத்தால் எதிரிகளின் சதி திட்டங்களை முறியடிப்பதற்கான ஆற்றல் உண்டாகும். புதிய வழிகளில் இருந்து வருமானம் ஈட்டும் வாய்ப்புகள் உருவாகும்.
வியாபாரிகளுக்கு இந்த காலகட்டம் அமோகமான பலன்களை கொடுக்கப்போகின்றது. வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் யோகம் காணப்படுகின்றது.
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த யோகமானது தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, பொருளாதார ரீதியிலும் சரி அமோகமான பலன்களை கொடுக்கப்போகின்றது.
நீண்ட காலமாக நிலுவையில் இருந்த கடன் பிரச்சினைகளுக்கு முடிவுகட்டும் அளவுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
புதிய முயற்ச்சிகளுக்கு குடும்பத்தவர்களின் ஆதரவு பலமாக இருக்கும். புதிய வருமான ஆதாரங்களுக்கான வாய்ப்புகள் உருவாகும். பொன் பொருளை குவிப்பதற்கான யோகம் காணப்படுகின்றது.
கும்பம்

கும்ப ராசியினருக்கு இந்த கேந்திர யோகமானது பொருளாதார ரீதியில் இதுவரையில் இல்லாத அளவுக்கு உச்சகட்ட அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப்போகின்றது. இவர்களை பொருத்தமட்டில் இது வெற்றிகள் குவியும் காலமாக இருக்கும்.
நீண்டகாலமாக இருந்து வந்த மன கசப்புகள், மன அழுத்தம் நீங்கி வாழ்க்கை இனிமையானதாக மாறும். ஏப்ரல் 18 ஆம் திகதிக்கு பின்னர் பணவரவு அபரிமிதமாக அதிகரிக்கும்.
பணியிடத்தில் சக ஊழியவர்களால் இருந்துவந்த பிரச்சினைகள் நீங்கி சுமூகமான நிலை உருவாகும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான யோகம் கூடிவரும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |