அடாவடி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நயன்தாரா மகன்கள்... படுவைரலாகும் காணொளி!
எல்.ஐ.கே படத்தின் அடாவாடி பாடலுக்கு நயன்தாரா விக்னேஷ் சிவனின் இரு மகன்களான, உயிர் மற்றும் உலக் போட்ட குத்தாட்டம் தற்போது இணையத்தில் படு வைரலாகியுள்ளது.
எல்.ஐ.கே திரைப்படம்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள எல்.ஐ.கே திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது.

7 ஸ்கிரீன் ஸுடியோஸ் மற்றும் ரவுடி பிக்ச்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள சைன்ஸ் ஃபிக்ஷன் திரைப்படம் தான் லவ் இன்சூரன்ஸ் கம்பேனி.
பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார். சிமான் பிரதீப் ரங்கநாதனின் தந்தையாக நடித்துள்ளார். கரித்தி ஷெட்டி , கெளரி கிஷன் நாயகியாக நடித்துள்ளார்கள்.

அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக இருந்த இப்படம் சில காரணங்களால் திரைக்கு வராமல் ஒத்திவைக்கப்பட்டது.
ஏற்கனவே இப்படத்தில் அனிருத் இசையில் மூன்று பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் நான்காவது பாடலான 'அடாவடி' பாடல் நேற்று வெளியானது.
இந்த பாடலில் விக்கி நயனின் இரு மகன்களான உயிர் மற்றும் உலகு நடனமாடியுள்ளனர். குறித்த காணொளி தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |