யார் மோர் அருந்தக்கூடாது? மீறி குடித்தால் வரும் விளைவு என்ன?
Kidney Disease
By Pavi
மோர் அருந்துவதால் உடல் நலத்திற்கு பல நன்மைகள் இருந்தாலும் குறிப்பிட்ட சிலர் இந்த மோரை குடிக்க கூடாது என எச்சரிக்கப்படுகின்றது.

மோர்
கோடை காலத்தில் மோர் குடிஸப்பதை மக்கள் பழக்கப்படுத்திக்கொண்டுள்ளனர். கோடை காலத்தில் நமது உடலை குளிர்ச்சியாகவம் நீரேற்றத்துடனும் வைத்துக்கொள்ள மோர் குடிப்பது அவசியம்.
மோர் குடித்தால் குடல் ஆரோக்கியம் சீராக இருப்பதுடன் உடல் குளிர்ச்சியாகவும் இருக்கும். வெயில் காலத்தில் நமது உடல் நீரேற்றத்ததுடன் இருக்கும்.
ஆனால் உடலில் சில பிரச்சனைகள் உள்ளவர்கள் மோர் குடிப்பதை தவிர்க்க வேண்டும் எனப்படுகின்றது. இதற்கு காரணத்தை பதிவில் பார்க்கலாம்.

சிறுநீரகப் பிரச்சனைகள்
- சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்கள் மோர் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். அதை மீறி அவர்கள் மோர் குடித்தால் அவர்கள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மோரில் உள்ள பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை சிறுநீரகப் பிரச்சனைகளை மோசமாக்கக்கூடும். இதனால் தான் சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் மோர் குடிக்க கூடாது என கூறப்படுகின்றது.
சளி, இருமல் மற்றும் காய்ச்சல்
- உங்களுக்கு சளி, இருமல் அல்லது காய்ச்சல் இருந்தால், மோர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். மோருக்கு உடலைக் குளிர்விக்கும் தன்மை உண்டு. எனவே குளிர்ச்சியான மோர் சளி, இருமல் அல்லது காய்ச்சலை மோசமாக்கும். எனவே தான் இதுபொன்ற பிரச்சனை இருந்தால் மோர் குடிக்க கூடாது. மேலும் உங்களுக்குத் தொண்டை வலி இருந்தாலும் மோரைத் தவிர்க்கப் பரிந்துரைக்கப்படுகிறது.
லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாமை
- நீங்கள் லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாமையால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? அப்படியானால், நீங்கள் மோர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். லாக்டோஸ் சகிப்புத்தன்மையின்மை என்பது பால் மற்றும் பால் பொருட்களில் உள்ள சர்க்கரையை (லாக்டோஸ்) உடல் ஜீரணிக்க முடியாத நிலையாகும். மோர், பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது, மேலும் லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாதவர்களால் பாலை ஜீரணிக்க முடியாது. இதனால் கடுமையான செரிமான பிரச்சனை வரும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US